புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி,புதிய கல்வி கொள்கை,சி.பி.எஸ்.இ.பாடம்,இந்தி மொழி, EWS, மதம், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் திணித்து கல்விக்கூடங்களை காவி கூடங்களாக மாற்றுவதில் காட்டும் அக்கறையை ஒரு துளி கூட மாணவர்களின் கல்வி மேம்பாடு வளர்ச்சி பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அக்கறை காட்டாமல் புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்* . *புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கண்டனம்*" ---------------------------------------- * புதுச்சேரி மாநிலத்தில் பனிரெண்டாம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்து பல மாதங்கள் ஆகியும் கூட இதனால் வரை மாணவர்களின் சேர்க்கை முழுமை பெறவில்லை . * அரசு கலைக்கல்லூரி , சட்டம், பொறியியல் போன்ற கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு கலந்தாய்வுகளை நடத்திய சென்டாக் நிர்வாகம் தற்பொழுது மூன்றாவது கலந்தாய்வை நிறுத்தி நேரடியாக இறுதி கலந்தாய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது . * இதே போல எல்லா மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.