முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்கட்டணம் உயர்வு.. முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கண்டனம்..!

புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை அரசு தற்போது மின் கட்டணத்தை கடுமையாக ஏற்றி உள்ளது. அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும்‌ பாதிக்கப்படுவார்கள்‌. மக்கள் தற்போது குப்பை வரி, வீட்டு வரி போன்ற பல வரிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் பாதிப்படைய செய்யும். புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். பெருபான்மையான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நிலையில் சுமார் 10,000 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பத்தினர் இன்று தங்களது குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ள நிலையில் அரசு கூடுதல் சுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.  புதுச்சேரி மாநில அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டால் பணத்தை மிச்சபடுத்தலாம். ஆனால் நிதிநிலையை காரணம் காட்டி தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி வருவது மக்களுக்கு அர...