புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் புதுவை அரசு தற்போது மின் கட்டணத்தை கடுமையாக ஏற்றி உள்ளது. அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் தற்போது குப்பை வரி, வீட்டு வரி போன்ற பல வரிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் பாதிப்படைய செய்யும். புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். பெருபான்மையான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நிலையில் சுமார் 10,000 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பத்தினர் இன்று தங்களது குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ள நிலையில் அரசு கூடுதல் சுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டால் பணத்தை மிச்சபடுத்தலாம். ஆனால் நிதிநிலையை காரணம் காட்டி தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி வருவது மக்களுக்கு அரசின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்படுத்தும். இது வருகின்ற சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். எனவே சராசரி மக்களுடைய எண்ணங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு பகுதியில் தினம்தோறும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதை அரசால் சரி செய்ய முடியவில்லை.
மேலும் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மறைமுகமாக பல்வேறு கட்டணங்களை மின்துறை வசூலித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல சமீபத்தில் மாற்றப்பட்ட மின் மீட்டர்கள் குறைவாக மின்சாரம் பயன்படுத்தினாலும், யூனிட் வேகமாக ஒடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்காக அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுதால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மக்களிடம் இருந்து மின் கட்டணத்தை வாங்குவதில் உள்ள வேகம், அதற்கான சேவையை மின்துறை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. அனைத்து பகுதிகளிலும், தினசரி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதற்காக இதுவரை அரசு எந்தவிதமான முன்னிச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியாதல், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியவரும். வீட்டு வாடகை மற்றும் மின்கட்டணம் போன்றவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்று முழக்கத்தோடு வெற்றி பெற்றுவிட்டு இன்று அதை நிறைவேற்றவில்லை. அதன் வெளிப்பாடுதான் பாராளுமன்றத்தில் தோல்வி.
எனவே அரசு இதனை உணர்ந்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மாநில அரசு ஒரு குறிப்பிட்ட யூனிட்டுக்கு மானியமாக அரசு வழங்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு முன், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இன்னல்களை ஆட்சியாளர்கள் நேரில் சென்று பார்த்தால், மக்களின் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் தெரிந்து கொண்டு இருப்பார்கள். மேலும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக