புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டை பகுதியில் நடைபெற்றது. மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி தலைவர் சோமசுந்தரம்,தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி ஆசிர்வாத், ரமேஷ், நமச்சிவாயம் மற்றும் தொகுதி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ,மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் பெரும்பான்மையான வார்டுகளில் பாஜக போட்டியிட வேண்டும்,பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை பொது மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.