புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீய சக்திகள் அரசாளும் போது இயற்கை கோரதாண்டவம் ஆடுமாம். அந்த வகையில் தமிழக விடியா திமுகவின் ஆட்சி என்பது தமிழக அரசியலில் ஒரு இருண்ட ஆட்சியாக தற்போது மாறியுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 90 சதவீத மக்கள் தற்போது பெய்த மழையால் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். வீட்டிற்குள் 5 அடி 6 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதில் செப்டிக் டேங் மற்றும் வாய்க்கால் கழிவு நீர்கள் தேங்கியதால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் மக்கள் சொல்லனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் எந்தவித நிவாரண உதவிகளையும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு மக்களுக்கு செய்யவில்லை. இந்த ஆட்சி அமைய ஏன் வாக்களித்தோம் என்ற எண்ணத்தில் சென்னை மாநகர மக்கள் கடந்த சில நாட்களாக மனவெந்து போயுள்ளனர். சென்னை மாநகரில் உள்ள 90 சதவீத உட்புற, நகர்புற, சுற்றுப்புற பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மழை நீரால் தேங்கி போக்குவரத்து என்பது முழுமையாக முடக்கப்பட்டுள...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.