முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாய் இளங்கோவன் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி..

புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை மற்றும் , Attack and Defence செஸ் மற்றும் பேக்டம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாபெரும் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் இளங்கோவன் மற்றும் மருத்துவர் சாய் சரன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை மற்றும் , Attack and Defence செஸ் அகாடமி மற்றும் பேக்டம் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா பில்லாபாங் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் புதுவை மற்றும் தமிழக பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் இளங்கோவன் மற்றும் நிர்வாகி மருத்துவர் சரண் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.  நிகழ்ச்சிக்...

ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது புதுச்சேரி பிரதேச ராகுல்காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு சார்பாக 75வது ஆண்டு  சுதந்திர தினம்,வண்ண அருவி கலைக்கூடத்தில் சிறப்பாக  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பள்ளி மாணவ மாணவிகளிடையேதேசப்பற்றை வளர்க்கும் விதமாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராகுல்காந்தி தேசிய பேரவை தலைவர் RE. சேகர் மற்றும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திருவேங்கடம் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் அசோகன், தனக்கோடி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர்  பிரபு,அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர்  ராஜேந்திரன், கலைமாமணி ஓவியர்  அன்பழகன், ஓவியர்கள் மாறன், தமிழ்ச்செல்வி, மணிமாறன், ...

துளுக்கானத்தம்மன் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

*ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வர் திருக்கோவில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.கே.டி ஆறுமுகம்,பாஜக நிர்வாகி வருண் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்* புதுச்சேரி கோவிந்தசாலை- கல்வி பங்களா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் திருக்கோவில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. தில்லை சிவபுரத்து அரசன் சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் சிவானந்த மணிவாசகர் திருக்கூட்டம் சார்பில் சிவ.ஜெயசங்கரர் மற்றும் சிவ கல்யாணி அம்மா  தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம் வருண், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஓம் சக்தி ரமேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து முற்றோதல் நிகழ்வில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வருண், சால்வை அணிவித்து, அன்னதானம் உபயம் செய்தார். ...

புதுச்சேரி அரசு கேட்டரிங் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை துவக்கம்!

புதுச்சேரி அரசு கேட்டரிங் கல்லூரி முதல்வர் டாக்டர். விஜயநம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாண்டிச்சேரி முருங்கப்பாக்கத்தில் அரசு கல்லூரியான Pondicherry Institute of Hote Management, கடந்த 31 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.  அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள, புதுவை மாநில சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் இந்த அரசு கேட்டரிங் கல்லூரியில் 3 வருடம் BSC (ஹோட்டல், நிர்வாகம்) பட்டப் படிப்பிற்கும், மேலும் ஒன்றரை வருடம் Diploma (Food Production) மற்றும் ஒன்றரை வருடம் Diploma (Food and Beverage Service) பட்டய படிப்பிற்கும் காலியாக உள்ள இடங்களில் நேரடி சேர்க்கை (Spot Admission) 03:08/2022 முதல் நடைபெற உள்ளது. கல்வித் தகுதி; BSc பட்டப் படிப்பு : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி (எல்லா பாடப் பிரிவுகளும்) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். Diploma பட்டயபடிப்பு: 12-ஆம் வகுப்பில் (எல்லா பாடப் பிரிவுகளும்) தேர்ச்சி மட்டும் போதுமானது வயது வரம்பு BSc & Diploma : 01/07/2022 அன்று 25 வயது மிகாமல் இருத்...

சாவர்க்கரை குறைகூற யாருக்கும் உரிமையில்லை! அன்பழகன் கருத்து!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் செஸ் போட்டி துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமருக்கு மேடையில் வெண்சாமரம் வீசிய திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மறு தினமே திமுக கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளவும் மக்களை ஏமாற்றவும் மத்திய அரசை வசைப்பாடி அறிக்கை விடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. தமிழக திமுக முதலமைச்சரின் மத்திய விரோத அறிக்கையை புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு கடந்த ஆட்சியின் போது எனக்கு ஏற்பட்ட நிலைதான் தற்பொழுது தமிழக முதலமைச்சருக்கும் ஏற்படுகிறது என கூறியிருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இப்ராஹீம் லோடி ஆட்சியை இருண்ட ஆட்சி என சரித்திர வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள். அதுபோல் புதுச்சேரி மாநிலத்தின் இருண்ட ஆட்சி என்பது கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். அப்படிப்பட்ட இருண்ட ஆட்சிக்கு தலைமை ஏற்று இருந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ...