புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை மற்றும் , Attack and Defence செஸ் மற்றும் பேக்டம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாபெரும் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் இளங்கோவன் மற்றும் மருத்துவர் சாய் சரன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்
புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை மற்றும் , Attack and Defence செஸ் அகாடமி மற்றும் பேக்டம் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா பில்லாபாங் பள்ளியில் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் புதுவை மற்றும் தமிழக பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் இளங்கோவன் மற்றும் நிர்வாகி மருத்துவர் சரண் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஸ் அகாடமி நிர்வாக இயக்குனர்கள் கதிரவன், பர்வஹன், வசந்தகுமார், அருண் மற்றும் சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.
விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், செஸ் அகடமி ஊழியர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக