முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுவையில் ஐ.டி பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோ.தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் தற்போது வருடத்திற்கு சுமார் 30,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்கும் வகையில் வேலை தேடி வருகின்றனர். இளைஞர்கள் பொறுப்போடு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் புதுச்சேரியில் அதற்கான ஐடி நிறுவனங்களோ அல்லது அதற்கேற்ப தொழில் நிறுவனங்களோ அல்லது மிகப்பெரிய தொழிற்சாலைகளோ இல்லை. அதனால் வேலைவாய்ப்புக்காக அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பெங்களுர் போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கம் சென்று வேலைவாய்ப்பை தேடுகின்றனர். ஒரு பக்கம் வேலை தேடுவதற்கு ஆகும் செலவே அவர்களை சோர்வடையச் செய்கிறது. சிலருக்கு வேலையே கிடைக்காமல் கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கான மரியாதை இருப்பதில்லை. பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் மனரீதியாக பாதிப்பிற்குள்ளாகின்றனர். அதிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புதுச்சேரியிலே மிக குறைந்த சம்பளத்த...