முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்..!!

  கோவிந்தா' முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருநங்கைகளின் புனிதத் தலமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகாபாரதத்தை நினைவூட்டும் திருவிழா  இந்துக்களின் புராண நூலான மகாபாரதத்தில் அரவான் தெய்வத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழா, கடந்த ஏப்ரல்.14-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று திருநங்கைகளின் தாலி கட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. 21 அடி உயர பிரம்மாண்ட தேர் இந்த தேரோட்டத்திற்காக கீரிமேடு கிராமத்தில் இருந்து அரவானின் புஜம், மார்பு பகுதிகளும், நத்தம் கிராமத்தில் இ...

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு..

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் இவ்வாண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகாபாரதப் போரில் வெற்றி பெற அரவான் என்ற இளவரசனை பஞ்சபாண்டவர்கள் பலி கொடுத்த வரலாற்றை நினைவு கூரும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அரவானை கணவனாக ஏற்றுக் கொள்ளும் அடையாளமாக திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து, கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் தாலி கட்டும் நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு, வளையல், பூமாலை அணிந்து, புதிய உடையில் மணப்பெண் அலங்காரத்தில் அரவானை கணவனாக ஏற்று தாலி கட்டிக் கொண்டு வருகின்றனர். தாலி கட்டும் நிகழ்வுக்குப் பிறகு, திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். இதனைத் ...

மிஸ் கூவாகம் திருநங்கை அழகிப்போட்டி புதுச்சேரி அனன்யா மூன்றாம் இடம்..!

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மிஸ் கூவாகம் திருநங்கை அழகிப்போட்டி இந்தாண்டும் கோலாகலமாக விழுப்புரத்தில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களும் வெளிநாடுகளும் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில், கோயம்புத்தூரை சேர்ந்த சூர்யா சிறந்த தோற்றம், நம்பிக்கைமிகு நடை, மற்றும் திறமையான வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் இடத்தைப் பெற்று மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார். இரண்டாம் இடத்தை மலேசியாவை சேர்ந்த நிஷா பெற்றார். அவரின் தனித்துவமான நடையும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அணிவகுப்பும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மூன்றாவது இடத்தை புதுச்சேரியை சேர்ந்த அனன்யா பெற்றார். இவரின் ஆற்றலும் மேடை நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இந்த நிகழ்ச்சி திருநங்கைகளின் சமூக முன்னேற்றத்தையும், அவர்களின் திறமைகளையும் வெளிக்கொணரும் முக்கியமான மேடையாக திகழ்கிறது. பலரும் திரளாக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சி முழுவதும் உற்சாகம் நிற...

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்; போக்குவரத்து போலிஸார் அதிரடி..

  புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து சாலை பயனாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பு சூழலை உருவாக்கும் நோக்கில். புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து வாராந்திர சிறப்பு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகள். செல்போன் பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுதல், சிறார்கள் வாகனம் ஓட்டுதல் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற முக்கிய போக்குவரத்து குற்றங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆபத்தான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுச்சேரி முழுவதும் சிறப்பு அமலாக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிமீறிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகின்றனர் மற்றும் விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த வேண்டியுள்ளது. 20.04.2026 முதல் 26.04.2026 வரை ...

உலக புகழ்பெற்ற கோவிலில் உள்ள மூலவரின் தங்க சங்கிலி திருட்டு..

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தங்க நகை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடும் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலின் மூலவர் கூத்தாண்டவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 23 சவரன் எடையுடைய தங்கச் சங்கிலி இன்று காலை சுமார் 8 மணியளவில் காணாமல் போனது. கோவிலுக்குள் பக்தர் போல் நுழைந்த மர்ம நபர் ஒருவர், சாமி தரிசனம் செய்வது போல நடித்து, அவ்வழியாக நகையை திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் அறிந்த உடனே கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழா நடைபெற்று கொண்டிர...

புதுச்சேரி மாநிலத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்..?

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் புதுச்சேரியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் இன்று முதல் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தொடங்கியது. இதில் கட்டுமரம், நாட்டுப்படகளை தவிர அனைத்து படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடைகாலத்தையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைபடகுகளும், பைபர் படகுகளும் கரை திரும்பின. புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திகுப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாம் கடல் பகுதிகளிலும் மீன்பிடி படகுகள் அந்தந்த மீனவ கிரமங்களிலும் பெரிய விசைப்படகுகள் நள்ளிரவு முதல் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு செல்லாததால் இந்த நாட்களில் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகு களையும், வலைகளையும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும் மீன்பிடி ...

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்..

  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, இவ்வாண்டும் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் இன்று மாலை கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு கொண்டாடும் இத்திருவிழா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் சிறப்புடையது. விழாவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற சாகை வார்த்தல் நிகழ்ச்சியில், சுற்றுவட்டார ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கூழ் மற்றும் கஞ்சிக் குடங்களை எடுத்துக்கொண்டு மேளதாள முழக்கத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், கோவில் அருகிலுள்ள அம்மன் கோவிலில் மாவிளக்கு ஏற்றி, படையல் வைத்து, பக்தர்களுக்கு கூழ் மற்றும் கஞ்சி வழங்கி வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறந்தல் மற்றும் ...