சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ராஜகோபால் பழனி சுவாமி, கவர்னர், முதல்வர், தலைமை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி, வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், எஸ்ஐஆர் (SIR) குறித்து கேள்வியெழுப்பிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ராஜீ என்பவரை மிரட்டி, தாக்குதல் தொடுத்த செயலை, சுதந்திர தொழிலாளர் சங்கம் (சு.தொ.ச) வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர் ராஜீ அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க திறனின்றி, திரு. சீமான் அவர்கள், "நீ எந்த தொலைக்காட்சி? உன்னையெல்லாம் எவன் கேள்வி கேட்கச் சொன்னது? உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று தரக்குறைவான, ஒருமையில் வார்த்தைகளால் திட்டி, கேள்வி கேட்கக்கூடாது என்று மிரட்டி இருப்பது ஜனநாயகத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. அத்துடன், தன்னுடன் வந்திருந்த தனது கூட்டத்தினரை ஏவிவிட்டு, செய்தியாளர் திரு. ராஜீ அவர்களை நெட்டித் தள்ளி தாக்கச்...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.