முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொத்துக்காக வளர்த்தவர்களையே கொலை செய்த கொடூரம்; இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தர்மபுரி அகத்தியர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 74) இவரது மனைவி வசந்தா(வயது 60). அவர்களுக்கு குழந்தை இல்லாததால் வசந்தாவின் தங்கை மகளான ஆனந்தியை (வயது 36) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர். மேலும் வளர்ப்பு மகளான ஆனந்திக்கு திருமணம் ஆன நிலையில் ஆனந்தி மற்றும் அவரது கணவர் முருகவேல் (வயது 37) ஆகியோர் நாராயணசாமி வீட்டிலேயே இருந்தனர். நாராயணசாமி வசந்தா தம்பதியினர் புதிதாக வீடு ஒன்றை கட்டினர். அந்த வீட்டை தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு ஆனந்தி மற்றும் முருகவேல் வற்புறுத்தி வந்தனர். இதற்கு நாராயணசாமி வசந்தா தம்பதி சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18.9.2012 அன்று நாராயணசாமி மற்றும் வசந்தா இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த ஆனந்தி மீது மண்ணெண்ணெய் இருந்தது. இதைத்தொடர்ந்து மேட...

முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்த பாஜக!

ஜனாதிபதி வேட்பாளர்  திரௌபதி முர்மு  வருகிற சனிக்கிழமை புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன்  தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உணவு வழங்கல் துறை அமைச்சர் த சாய் ஜெ சரவணன் குமார், பாராளுமன்ற உறுப்பினர்  செல்வகணபதி ஆகியோர், முதலமைச்சர் த ரங்கசாமி அவர்களின் இல்லத்திற்கு சென்று அக்கார்ட் ஹோட்டலில் (2/7/2022) சனிக்கிழமை நடைபெற உள்ள ஜனாதிபதி வேட்பாளர் உடனான கூட்டத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்கள்

தேசிய மருத்துவர்கள் தினம்; முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மருத்துவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய அருந்தொண்டை போற்றிப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளதால்தான் மருத்துவர்கள் வாழும் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, குடும்பத்தைப் பிரிந்து, தன்னலமற்று, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது அவர்கள் ஆற்றிய சேவை என்றும் போற்றுதலுக்குரியது. இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விசிக சார்பில் ஜீலை 7 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் இரா.தமிழ்வாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி அரசுக்கு சொந்தமான மின் துறையை அதானிக்கு விற்று லாபம் கொழிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 7ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.அரசுக்கு எதிரான இந்தப் பேரணியை எழுச்சியோடு நடத்திக் காட்ட பாகூர்,ஏம்பலம், மணவெளி ஆகிய தொகுதிகளை சார்ந்த விசிக நிர்வாகிகள் கூட்டம் பாகூரில் நடைபெற்றது. மனவெளி தொகுதி செயலாளர் வெண்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் பொருளாளர் தமிழ்மாறன்,மாநில செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பாகூர்,ஏம்பலம்,மணிவெளி ஆகிய தொகுதிகளில் முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.அதேபோல் இம்மூன்று தொகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் அப்பேர் அணிகள் பங்கேற்பு என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏம்பலம் தொகுதி பொ...

போலி மதச்சார்பின்மை பேசும் திமுக! அன்பழகன் கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது  புதுச்சேரி மாநிலத்தில் போலி மதச்சார்பின்மை பேசும் கடந்த கால திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வஃக்பு வாரியத்திற்கு உறுப்பினர்களைக் கூட நியமனம் செய்யாமல் முஸ்லிம் மக்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்தனர். அவர்களது ஆட்சியில் ஐந்தாண்டு காலம் முழுமையாக வஃக்ப் வாரியம் அமைக்காமல் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தூரோகம் இழைத்தனர். இதனால் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அரசு மூலம் எந்தவிதமான பயனும் அடைய முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் வஃக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவரை தேர்தல் மூலம் வஃக்பு வாரியத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தலில் அன...

இந்தியாவிலேயே முதல் முறையாக, புதுச்சேரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய வகுப்பறை துவக்கம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய வகுப்பறை துவக்க விழா நடைபெற்றது  புதுவை கல்வித்துறை மற்றும் சத்யா சிறப்பு பள்ளி இணைந்து இந்தியாவில் முதல் முறையாக அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கிய மாதிரி வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி புதுப்பேட்டை கோலகார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.  பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அனைத்து குழந்தைகளும் இணைந்து கற்கும் சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பு மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். விழாவில் சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா வரவேற்புரை வழங்கி, திட்டத்தின் நோக்கம் பற்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நலத்துறை செயலர் உதயகுமார், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கௌடு, சமூக நலத்துறை பத்மாவதி,இணை இயக்குநர் நடனசபாபதி, மகளி...

நேர்மையான அதிகாரி பணியிடை மாற்றம்! தொழிற்சங்கங்கள் கண்டனம்!

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,  புதுச்சேரி, தொழிலாளர் துறையின், துணை ஆணையர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கே வராமல், பணிகளை மேற்கொள்ளாத சூழலில், தொழிலாளர் வழக்குகளை நேர்மையுடன் கையாண்ட ஒரு அதிகாரி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்பை வெளியிடும் நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தற்போது, தொழிலாளர் ஆணையரும் இல்லாமல், துணை ஆணையரும் இல்லாமல் தொழிலாளர் துறை முடக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செய்த ஏற்பாடாகும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.   புதுச்சேரியில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையிழப்பு, ஊதிய வெட்டு, உரிமைகள்-சலுகைகள் பறிப்பு, முறையற்ற வேலை நேரம், பணி சூழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வடமாநில தொழிலாளர்கள் மந்தைகளாக அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு கூட நீதி கிடைப்பதில்லை.   ...

நிர்வாக திறமையின்மையால் மூடு விழாவை நோக்கி பிப்டிக் நிர்வாகம்! அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு கொத்தடிமையாக வேலைக்கு செல்லும் துர்பாக்கிய நிலை நிலவுகிறது. புதுச்சேரியில் ஸ்திரமான தொழில்கொள்கை இல்லாததால் புதிதாக எந்த தொழிற்சாலையும் வரவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளும் புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டன. தொழிற்சாலைகளுக்கு நிலம், கடனுதவி வழங்கி தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது பிப்டிக் நிர்வாகத்தின் பணி. ஆனால் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக பிப்டிக் நிறுவனம் தனது பணியை சரிவர செய்யாததால் தொழிற்சாலைகள் இன்றி, வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் பரிதவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் *இந்திய ரிசர்வ் வங்கி புதுச்சேரியின் பிப்டிக்  பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.* கொரோனா காலகட்டத்திலும், அதற்கு முன்பும் நிதியை சரியாக கையாளாத காரணத்தால் பிப்டிக் நிதி நிறுவன வியாபாரம் மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவு சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது....

சிறுபிள்ளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!அன்பழகன் பரபரப்பு அறிக்கை!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசிடம் இருக்கும் நில உரிமை அதிகாரம் மாநில அரசுக்கு தேவை என அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் மாண்புமிகு என்.ஆர். அவர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சீராய்வு கூட்டத்தில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சகட்டு மேனிக்கு முதல்வரையும், துணை நிலை ஆளுநரையும் விமர்சனம் செய்துள்ளனர். அதேபோன்று புதுச்சேரியில் உள்ள சில அரசியல் அறிஞர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர். தற்போதுள்ள நில உரிமை அதிகாரப்படி நம் அரசுக்கு 19 ஆண்டுகளுக்கு அதிகமாக கூடுதலாக ஒரு நாளாவது தனியாருக்கு குத்தகை விடும் உரிமை இருக்கிறதா? அதேபோன்று, 100 சதுர அடி அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அதிகாரம் உள்ளதா? இது சம்பந்தமான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. நம் அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தை மாநில...

புதுச்சேரியில் நாளை(29-06-2022) மின்தடை அறிவிப்பு!

புதுச்சேரி மின் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி -வில்லியனூர் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (29-06-2022) காலை 9:00 மணி மதியம் 2 மணி வரை நகர பகுதிகளான, கடற்கரை சாலை முதல் எல்லைப் பிள்ளை சாவடி வரை மற்றும் அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் கிழிப்பு! அன்பழகன் ஆவேசம்!

புதுச்சேரி அதிமுக அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த அதிமுகவினர், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் சென்னை அதிமுக அலுவலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது அங்கிருந்த ஒபிஎஸ் படங்களை அதிமுகவினர் கிழித்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை மாநில நிர்வாகிகள் கிழித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஓபிஎஸ் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், அதிமுகவிற்கு விரோதமாகவும், எதிராகவும் செயல்பட்டு வரும் ஓபிஎஸ்,வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களின் செயலை புதுச்சேரி அதிமுக கண்டிப்பதாகவும், கட்சியை அழிக்க நினைக்கும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுக்கு மரண அடி அடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கட்சிக்பு எதிராக திமுகவின் B டீமாக செயல்படும் ஓ...

நிருபர் மீது பாமகவினர் தாக்குதல்!, மாணவர் கூட்டமைப்பு கண்டனம்;

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் நியூஸ் தமிழ் ஊடகவியலாளர் கிருஷ்ணா அவர்கள் மீது பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது இந்திய நாட்டின் நான்காம் தூண் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு தொடர்ச்சியான பாதுகாப்பற்ற நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களின் மதிப்பு என்ன என்பதை தொண்டர்களுக்கு சொல்லி வழி நடத்தாது வருத்தத்துக்குரியது ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய பாமகவினர் மீது புதுச்சேரி அரசு உடனடியாக உரிய வழக்கினை பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எமது அமைப்பின் சார்பில் வைத்துக் கொள்கிறோம்

புதுவை மாநிலத்தை சொந்த வீடாக மாற்ற மோடி முயற்சி! காங்கிரஸ் கண்டனம்!

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சொந்தமான, தற்போது அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருக்கின்ற,அரசாங்க சொத்துக்களின் உரிமைகளை இப்போது துணைநிலை ஆளுநருக்கு மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டிலே தற்போது இருக்கிறது இந்த உரிமைகள். இதை மத்திய அரசு மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, துணைநிலை ஆளுநருக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கிறது. இதன் மூலம் புதுச்சேரி அரசாங்கத்துக்கு சொந்தமாக இருக்கின்ற பல ஏக்கர் நிலங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்க முடிவெடுத்து விட்டார்கள். அதன்படி காலாப்பட்டில் உள்ள அசோகா கெஸ்ட் ஹவுஸ் மனை, சேதுராப்பட்டிலுள்ள தொழில் வளர்ச்சிக்கு உகந்த நிலங்கள், துறைமுகத்தை சுற்றியுள்ள அரசாங்க நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் & இதேபோல் எந்த பகுதியிலும் இருக்கின்ற (காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் இருந்தாலும்கூட) அத்தனையுமே ம...

ஆசிய இரும்பு பெண்மணி பட்டம்; புதுவை மாணவி அசத்தல்!!

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற புதுச்சேரி மாணவி கிருத்திகாவுக்கு ஆசியாவின் இரும்பு பெண்மணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மாணவி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுச்சேரி முதலியார்பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா வயது (17). தனியார் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கோயமுத்தூரில் நடந்த ஆசிய அளவிலான பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 17-ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி கிருத்திகா,  69 கிலோ உடல் எடை கொண்ட சப்- ஜூனியர் பிரிவில் பிரிவில் இலங்கை, பூட்டான், நேபாளம், ஓமன்,மாலத்தீவு, ஈரான், மங்கோலியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மாணவி கீர்த்திகா பெண்கள் பிரிவில்185 கிலோ பளு தூக்கும் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதேபோல் 85 கிலோ பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். ஒரு ப...

தலையாட்டி பொம்மை போல் முதலமைச்சர் செயல்படுவதா? அதிமுக கண்டனம்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் புதுச்சேரி மாநில மக்கள் பிரதிதிகளுக்கு உரிய அங்கீகாரம், அதிகாரம் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறிய துறை போல புதுச்சேரி மாநிலம்  செயல்பட வேண்டிய துர்பாக்கிய நிலை நிலவுகிறது. இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேர்தலுக்கு தேர்தல், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறி மக்களின் ஆசைக்கு தீ வைத்து குளிர்காய்வதும் வாடிக்கையாகிப்போனது. கடந்த தேர்தலின்போது, மாநில அந்தஸ்தை பெற வலியுறுத்தி தேர்தலையே புறக்கணிப்போம் என இப்போதைய முதலமைச்சர் சூளுரைத்தார். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதலமைச்சரின் சூளுரை என்ன ஆனது? ஆட்சி அமைந்து ஓராண்டை கடந்தும் டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில அந்தஸ்து பெற சிறு முயற்சியைக்கூட முதலமைச்சர் மேற்கொள்ளாதது புதுச்சேரி மாநில மக்களை பெரும் வேதனையிலும், விரக்தி...

அரசியல் அறிவு இல்லாத எதிர்கட்சி தலைவர்! அன்பழகன் பரபரப்பு அறிக்கை!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதாவது: சமீபத்தில் புதுவைக்கு வருகைதந்த மத்திய உள்துறை அமைச்சரிடம் புதுச்சேரி மாநில நலன் சம்பந்தமாக மாண்புமிகு முதல்வர் அளித்த கோரிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சீராய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநில அரசுக்கு தேவையான நிதி உதவிகள், மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவிகித மத்திய நிதி உதவி, தற்போது மத்திய அரசிடம் உள்ள அரசு நிலம் விற்பனை அதிகாரம், அரசு நிலம் குத்தகை அதிகாரங்கள் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இது என்ன பிரச்சனை என்று கூட தெரிந்து கொள்ளாமல் சரியான புரிதல் இல்லாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் நில அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு வழங்கினால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் எதிர்க்கட்சித்தலைவர் சிவா அவர்கள் அறிவித்துள்ளார். 1973 க்கு பிறகு நில விற்பனை அதிகாரம் முழுக்க, முழுக்க மத்திய அரசிடம் உள்ளது. அதேபோன்று ...

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்; ஐஜி சந்திரன் தகவல்!

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக காவல்துறை தலைவர் சந்திரன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் சந்திரன், ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் முதல் நிகழ்வாக காவல் துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் என 500-கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவங்கி வைக்க உள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து சொல்கிறார் என தெரிவித்த அ...

புதுச்சேரியில் விஜய் ரசிகருக்கு குவியும் பாராட்டு!

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது ரசிகர் ஒருவர் ஒரு நாள் முழுவதும் இலவச ஆட்டோ சேவை செய்துவருவது விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே உள்ள கந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். கிருமாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தீவிர விஜய் ரசிகரான மணிகண்டன் தனது ஆட்டோவில் விஜய் படம் மற்றும் விஜய் வசனங்களை எழுதி உள்ளார். மேலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்களை இலவசமாக அழைத்து சென்று வருகிறார். மணிகண்டனின் இந்த சேவை விஜய் ரசிகர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

164 ஆண்டு பழைமையான பள்ளியை மூட அரசு முடிவு! மாணவர் கூட்டமைப்பு கண்டனம்;

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர்  சீ.சு.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் 164 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரஞ்சு அரசால் தொடங்கப்பட்டு புதுச்சேரியின் தொழில்நுட்ப கல்லூரிக்கு நிகராக நடத்தப்பட்டு வந்த JTS (V.V.GTHSS) என்ற பெயரில் செயல்பட்டு வந்து தற்போது வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பள்ளியை மூடுவதற்கான திட்டத்தை புதுச்சேரி அரசு எடுத்துள்ளதாக அறிகிறோம் குறிப்பாக இந்த ஆண்டு JTS பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கு இதுநாள் வரை விண்ணப்பங்கள் .அளிக்கப்படவில்லை. இந்தப் பள்ளியில் படித்து முன்னேறிய பல மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளனர். குறிப்பாக தொழிற்பயிற்சி மூலமாக அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் வாய்ப்பு இந்த பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இத்தகைய தொழில் பயிற்சி பள்ளிகளின் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் நல்ல அதிகாரத்திற்கு வருவதை கண்கூடாக கண்டிருக்கிறேன். இத்தகைய சூழலில் அப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனங்களை நடத்தாமல் ஒவ்வொரு தொழில் பாடத்திட்டங்களை குறைத்து அதன...

புதுச்சேரியில் ராகுல் காந்தி 52-வது பிறந்த நாள் விழா

ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 52 பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில், ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் ஆர்.இ சேகர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,தங்க தேர் இழுக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன்,கார்த்திகையன், பாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து,இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை,முல்லா வீதியில் உள்ள தர்க்காவில் சிறப்பு தொழுகை செய்யப்பட்டு, நிர்மலா...

கூட்டணி தர்மத்தை மீறி செயல்படும் தே.ஜ.கூட்டணி அரசு! அதிமுக புகார்;

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,  2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ், பாரதீயஜனதா, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிமுக தொண்டர்களின் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பின் காரணமாக என்ஆர்.காங்கிரஸ், பாஜக 16 இடங்களில் வெற்றி பெற்றது. என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டை கடந்த நிலையிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறதா? என்பது கேள்விக்குரியதாக உள்ளது.  தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் கூட்டணி முதலமைச்சரை நேரடியாக சந்தித்து, வாரிய தலைவர்கள் மற்றும் கட்சியினருக்கு பொறுப்புகள் வழங்கும்படி வலியுறுத்தி வந்தனர். கூட்டணி முதலமைச்சர் ஓராண்டுக்கும் மேலாக இந்த கோரிக்கை குறித்து செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் நேற்றைய தினம் (21.6.2022) தற்போது திமு...