புதுச்சேரி, தொழிலாளர் துறையின், துணை ஆணையர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கே வராமல், பணிகளை மேற்கொள்ளாத சூழலில், தொழிலாளர் வழக்குகளை நேர்மையுடன் கையாண்ட ஒரு அதிகாரி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்பை வெளியிடும் நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, தொழிலாளர் ஆணையரும் இல்லாமல், துணை ஆணையரும் இல்லாமல் தொழிலாளர் துறை முடக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செய்த ஏற்பாடாகும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
புதுச்சேரியில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையிழப்பு, ஊதிய வெட்டு, உரிமைகள்-சலுகைகள் பறிப்பு, முறையற்ற வேலை நேரம், பணி சூழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் மந்தைகளாக அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு கூட நீதி கிடைப்பதில்லை.
புதுச்சேரி அரசின் கார்பரேட், பெரு முதலாளிகளின் ஆதரவு போக்கால் முதலாளிகள் தொழிலாளர் துறையை துச்சமென மதிக்கிறார்கள்.
புதுச்சேரி அரசின் செல்வாக்கு பெற்ற பெரு முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றவே தொழிலாளர் துறை துணை ஆணையரை பணியிட மாற்றம் செய்துள்ளது.
எனவே, தேக்கமடைந்துள்ள தொழில் தாவாக்களை, தொழிலாளர் வழக்குகளை விரைந்து தீர்த்திட தொழிலாளர் துணை ஆணையரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்திட வேண்டும் அல்லது உடனடியாக வேறு நேர்மையான அதிகாரியை நியமித்திட வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அரசை வலியுறுத்துகின்றோம்.
புதுச்சேரி அரசின் முதலாளிகள் ஆதரவு நடவடிக்கைகள் தடையின்றி தொடருமேயானால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்செய்தியை தங்களின் மேலான பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
K. சேதுசெல்வம்
AITUC மாநில பொதுச்செயலாளர்
G. சீனுவாசன்
CITU புதுச்சேரி பிரதேச செயலாளர்
P.ஞானசேகரன்
INTUC மாநில பொதுச்செயலாளர்
S. புருஷோத்தமன்
AICCTU மாநில பொதுச்செயலாளர்
M. செந்தில்
LLF மாநில செயலாளர்
வேதா. வேணுகோபால்
MLF மாநில செயலாளர்
S. சிவக்குமார்
AIUTUC மாநில செயலாளர்.
K.மகேந்திரன்
NDLF மாநில பொதுச்செயலாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக