புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் மேதகு துணை நிலை ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில், புதுச்சேரி மாநிலத்தில் ஏழை, எளிய, நடுத்தர, பட்டியலின மாணவர்களும் மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தாங்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உயர்ந்த நோக்கம் எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மேதகு துணை நிலை ஆளுநருக்கு உண்டு. தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. *தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. பூகோளரீதியில் பல்வேறு பிராந்தியமாக பிரிந்துள்ள புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தையும், மாகே கேரளா பாடத்திட்டத்தையும், ஏனாம் ஆந்திர மாநில பாடத்திட்டத்தையும் பின்பற்றி தேர்வு எழுதியுள்ளனர். Follo...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.