முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ கல்வியில் 50 சதவீத இடங்களை பெற அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: மலிவு விளம்பர அரசியலுக்காக முதலமைச்சர் மற்றும் ஆளுநரை தரம் தாழ்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஷ சாராயம் அருந்தி 23-க்கும் மெற்பட்டவர்கள் மரணமடைந்த நிகழ்வுக்கு தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதையற்றவர் ஆவார். உண்மைநிலை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற விதமாக புதுச்சேரி முதலமைச்சரை பற்றியும், துணைநிலை ஆளுநரை பற்றியும் திட்டமிட்டு தவறான தகவல்களை எடுத்துக்கூறி திமுவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை காப்பாற்றும் விதத்தில் தொடர்ந்து நாராயணசாமி பேசி வருகிறார். அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட, தேர்தலில் நிர்காமல் ஓடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீண் விளம்பர பொய்யான அறிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக சார்பில் அன்பான வேண்டுகோள் விடுக்கிறே...

விஷ சாராய கடத்தல் கேந்தரிமாக மாறியுள்ள புதுச்சேரி..! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியின் அண்டை மாநில பகுதியான எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 15 மீனவர்கள் பலியாகியுள்ளனர். புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டில் விசாரிக்கின்றனர், புதுச்சேரியில் கண்காணிக்கின்றனர், முழு தகவல்கள் கிடைத்தவுடன் சொல்கிறேன், புதுச்சேரி கலால் துறை ரூ.1,330 கோடி வருவாய் ஈட்டித்தந்துள்ளது என மிகுந்த அலட்சியத்தோடும், சர்வாதிகார போக்கோடும் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தன் மீது எந்தவித பழியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பலி ஆடாக கலால்துறை துணை ஆணையரை இடமாற்றம் செய்துள்ளார். இப்போது கள்ளச்சாராயம் மட்டுமல்ல, விஷத்தன்மை கொண்ட மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் என்ற உயிரை கொல்லும் விஷ சாராய கடத்தல் கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது, புதுச்சேரியிலிருந்து பல ஊர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தில் ஆல்கஹால்தான் 15 பேர் உயிரை குடித்துள்ளது. இரவு நேர கவர்ச்சி நடன பார்களால் விபரீதம் ஏற்படும் என எச்சரித்தோம், இதை மீறியதால் அப்பாவி பொற...

அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.!

  புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சார்ந்த 15,415 மாணவ மாணவியர் தேர்வு எழுதிய நிலையில் 1677 மாணவ மாணவியர் தோல்வியடைந்து இருப்பதாக அறிகிறோம். இது கடந்த ஆண்டை விட தோல்வி சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.  தேர்ச்சி விகிதாச்சாரம் குறைந்ததற்காக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக கூறி நடந்திருக்கும் தவறில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது கல்வித்துறை அமைச்சரகம். புதிய கல்விக் கொள்கை திணிப்பு, சிபிஎஸ்இ பாடத்திட்டம், முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு திணிப்பு என மோடி அரசு கொண்டுவந்த பாசிச திட்டங்களை புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் திணிப்பதில் காட்டிய அக்கறையை ,அரசு பள்ளிகளில் ஆர் எஸ் எஸ் பயிற்சி எடுத்தவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் , ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிக்கு நெருக்கடி தந்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை சனாதன முறைகளை பாதுகாக்க துடித்ததே தவிர அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்தில் புத்தகம் வழங்காமல் அரசு பள்ளிகளில் உரிய ஆசிரியர...

மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு எடுக்க கவர்னர் தயங்குவது ஏன்? அதிமுக விமர்சனம்.!

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும் என மத்திய அரசின் சட்டம் இருந்தும் புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் 36 சதவீத இடங்களில் மட்டும் அரசின் இட ஒதுக்கீடாக பெறுகிறது. இதனால் ஆண்டுதோறும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களின் மருத்துவக் கல்வி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்தம் 450 இடங்களில், நியாயமாக சட்டப்படி நாம் பெறவேண்டிய 225 இடங்களுக்கு பதிலாக, 165 இடங்கள் பெறுவதால், மீதமுள்ள 60 மருத்துவ கல்வியிடங்கள் 60 கோடிக்கு தனியார் மருத்துவர் கல்லூரிகளால் விற்கப்படுகிறது. மருத்துவரான நம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இப்பிரச்சனையில் ஏன் நியாயமான முடிவை எடுக்க தயங்குகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை பெறவில்லை என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி அதிமுக...

அமைச்சர் சாய் சரவணனை கண்டித்து முற்றுகை.! ஏஐடியுசி எச்சரிக்கை.!

ஏஐடியூசி புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தியும் நிறுவனத்தைத் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வலியுறுத்தியும் பல கட்ட போராட்டங்கள் பாப்ஸ்கோ ஊழியர்கள் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் போது துறையின் அமைச்சர் சாய் சரவணகுமார் அவர்கள் தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தை துவங்கிய பாப்ஸ்கோ ஊழியர்கள் 20.3.2023 அன்று உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கி போராடினார்கள் இந்த போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சர், தலைமைச் செயலர், துறையின் செயலர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது பாப்ஸ்கோ பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி கூடி அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும...

பாஜக கூட்டணியில் இருந்து முதல்வர் ரங்கசாமி வெளியேற வேண்டும் ; சிபிஎம் வலியுறுத்தல்.!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவது ,கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் வஞ்சகமும், துரோகமும் கொண்ட ஆக்டோபஸ் போன்றது. கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வைத் தீர்மானகரமாக நிராகரித்திருக்கிறார்கள். பாஜகவிற்கு இந்தத் தோல்வி, பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளைவாகும். மேலும் கர்நாடகா மக்கள் அளித்த இந்த தீர்ப்பானது , பிரதமர் மோடியே தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொண்ட விஷத்தைக் கக்கிய மதவெறிப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்திருப்பதையும் காட்டுகிறது. மக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு எதிராக இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியுடன் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது. ...

கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை; திமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வௌியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் குறிப்பாக என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு தாராளமாக கஞ்சா கடத்தி வரப்படுவதும், அது புதுச்சேரியில் தடையின்றி விற்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.  கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி வருவதும், போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாய் மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பது தினந்தோறும் நாளிதழ்களில் வரும் செய்தியே அதற்கு சான்றாக உள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், கஞ்சா வியாபாரிகளுக்கு எதிராக PITNDPS சட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்....

வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனையாகாது.! புதுவை அரசுக்கு திமுக கண்டனம்.!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வௌியிட்டுள்ள அறிக்கையில், அரசின் சாதனைகள் என்பது அந்த அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை குறிப்பிடலாம். அரசின் வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனைகளாகாது. புதுவை அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டவை வெற்று அறிவிப்புகளே தவிர சாதனைகள் அல்ல. திட்டமிட்ட வளர்ச்சி என்பதே மாநிலத்தின் எழுச்சியாகும். அந்த வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், புதுமை பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மாணவிகளுக்கு மாதம் ரூ 1000, இளைஞர்களுக்கு 4 லட்சம் வேலை, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் என ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடி மக்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காக்கின்ற திட்டங்களை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த அரசும் செய்திடாத சாதனைகளைச் செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பதை திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வ...

அமைச்சர்களின் சுற்றுப் பயணம் குறித்து சிபிஐ விசாரணை.!அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி அதிமுக மாநில துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் உழைப்பாலும், அவர்கள் அளித்த வாக்காலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. பதவியேற்று 2 ஆண்டுகளாக *சுயநலமான வளர்ச்சி, சோதனைகளின் தொடர்ச்சி* என்ற ரீதியில் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. பதவி வந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களையும், மக்களையும் மறந்து சுயநலமாக செயல்படுவது நல்லதல்ல என முதலமைச்சருக்கு அதிமுக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அருமை அண்ணன் திரு.அன்பழகன் அவர்களும் இதே எச்சரிக்கையை நேற்றைய தினம் விடுத்துள்ளார். அரசின் திட்டங்களுக்கு துணை நிற்காமல் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், 2 ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல், சுயநலத்தோடு செயல்படும் அமைச்சர்களை இனம் கண்டு அமைச்சரவையில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என முதலமைச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கியது, ரெஸ்டோ பார...

விசிக தலைவர் திருமாவளவனுக்கு புதுச்சேரி பாஜக கண்டனம்.!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்த பொய்யான கருத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் கடந்த காலங்களில் நாடு முழுவதும் தனியார் மயமாக்கலை ஊக்கப்படுத்தியது திரு.மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை மக்கள் இன்றும் மறந்துவிடவில்லை. ஜிப்மர் மருத்துமனையில் தற்போது தமிழகத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் ஏழைகளுக்கு உடனே அனுமதி அளிக்கவில்லை என்று பொய்யான கருத்தை கூறி வரும் திருமாவளவனுக்கு தற்போது மட்டுமல்ல எப்போதும் வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களே அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற உண்மை தெரிந்தும் தெரியாதது போல் நாடகமாடி வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநில மக்களுக்கு முழு சேவையாற்றி வருகிறது என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். அதானியின் சொத்துக்கள் அனைத்தும் மோடி அவர்களின் சொத்துக்கள் என்றும் இதன்படி உலக ப...

கவர்னர் தமிழிசைக்கு திமுக கண்டனம்.!

  புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் மருத்துவ கேந்திரமாக, கர்ப்பக்கிரகமாக திகழ்ந்த ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் இயக்குநர் அகர்வால் அவர்களின் செயல்பாட்டால் இன்று குட்டிச்சுவராக்கப்பட்டு உள்ளது என்றும் இலவசமாக சிகிச்சை பெற்ற ஏழை நோயாளிகள் இன்று கட்டணம் என்று கூறி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஏப்ரல் 3–ஆம் தேதி போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில், வேலைவாய்ப்பில் புதுச்சேரிக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சிகிச்சை பெற வருவோரின் வருமான உச்சவரம்பை அடியோடு நீக்க வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் ஜிப்மர் இயக்குநரையும் அவரது கூட்டாளிகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். செவிலியர் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டை விசாரிக்க ஒன்றிய அரசு குழு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர் அவர்கள் இந்த விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை என்றும் கே...

திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணி தேர்வை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி அதிமுக மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் 35 சுருக்கெழுத்தர் பணிக்கு காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போட்டித்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 520 பேர் பங்கேற்றனர். இந்த போட்டித்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போட்டித்தேர்வில் ஒரு நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 800 வார்த்தைகளை தேர்வு நடத்துபவர் வாசிக்க வேண்டும். அதை குறிப்பெடுத்த தேர்வர்கள் 50 நிமிடத்தில் தட்டச்சு செய்து தர வேண்டும். ஆனால் தேர்வு நடத்துபவர் 10 நிமிடம் பொறுமையாக வாசிப்பதற்கு பதிலாக 8 நிமிடத்திற்குள் வார்த்தைகளை வாசித்து முடித்துள்ளார். அவரின் உச்சரிப்பு தெளிவாக இல்லை. வார்த்தைகளை வாசித்து முடித்த பிறகு பல்வேறு திருத்தங்கள் செய்யும்படியும் அவர் கூறியுள்ளார். இதனால் தேர்வு எழுதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக...