புதுச்சேரி அதிமுக மாநில துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் உழைப்பாலும், அவர்கள் அளித்த வாக்காலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. பதவியேற்று 2 ஆண்டுகளாக *சுயநலமான வளர்ச்சி, சோதனைகளின் தொடர்ச்சி* என்ற ரீதியில் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. பதவி வந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களையும், மக்களையும் மறந்து சுயநலமாக செயல்படுவது நல்லதல்ல என முதலமைச்சருக்கு அதிமுக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அருமை அண்ணன் திரு.அன்பழகன் அவர்களும் இதே எச்சரிக்கையை நேற்றைய தினம் விடுத்துள்ளார். அரசின் திட்டங்களுக்கு துணை நிற்காமல் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், 2 ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல், சுயநலத்தோடு செயல்படும் அமைச்சர்களை இனம் கண்டு அமைச்சரவையில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என முதலமைச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கியது, ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார் அமைக்க அனுமதி வழங்கியது, நள்ளிரவிலும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது, தரமற்ற சாலைகள் அமைத்தது, மின்துறை தனியார்மயம் என அரசின் பல்வேறு துறைகளிலும் சுயநலம் மற்றும் சுயலாப போக்கோடு அமைச்சர்கள் செயல்பட்டுள்ளது நிரூபணமாகி வருகிறது. *கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளுக்கு புதுச்சேரி அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களின் லாபத்தை பினாமிகள் பெயரில் முதலீடு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.* எனவே முதலமைச்சர் தானாக முன்வந்து, கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணம், பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து *சிபிஐ விசாரணை* நடத்த வேண்டும்.
அன்புக்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் *அருமை அண்ணன் அறிவுறுத்தலின்படி, சுயநலம், சுயலாப நோக்கோடு செயல்படும் அமைச்சர்களின் அமைச்சரவையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தர கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு திரு.எடப்பாடியார் அவர்களின் அனுமதி பெற்று, புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் சார்பாக, சிபிஐ விசாரணை நடத்தக்கோரி கழகத்தின் சார்பில் வலியுறுத்துவார். என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக