புதுச்சேரி பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கழிப்பறையில் விஷ வாயுக்கள் கசிவு மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமைச் செயலரின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவினர் ரூர்க்கி இந்திய தொழில் நுட்பக் கழக சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.ஏ. காஸ்மி, நீரி (NEERI) அறிவியல் அறிஞர் முனைவர் சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி பொறியியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சரவணன் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் பிரவின் சிங் சரண் ஆகியோர் 22-06-2024 அன்று காலை கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் புதுநகர் பகுதியையும் மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கனகனேரி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் முறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அங்கே கழிவுநீர் மாதிரி எப்படி சேகரிக்கப்படுகிறது, எந்தெந்த சோதனைகள் செய்யப்படுகின்றன அவை முறையாக செய்யப்பட்டு வெளியேற்றப்பட...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.