முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்வகணபதி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும்; சாமிநாதன் குற்றச்சாட்டு...

புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது. பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் கடும் பணியாற்றி தேசிய தலைவர் சீரிய ஆதரவுடன் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதனால் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களும், முழுமையான மக்கள் நல பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள சம்பளங்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. நீண்ட ன்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த வேலை வாய்ப்புகள் நேர்மையான முறைகளில் நிரப்பப்பட்டு மக்கள் விரும்பும் நல்ல அரசாங்கம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சி கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் திரு. செல்வகணபதி அவர்கள் தன்னுடைய மோசமான நிர்வாகத் திறமையால் காலங்காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு சித்தாந்த ரீதியாக தன்னலமில்லாமல் செயல்பட்ட எண்ணற்ற அனுபவ நிர்வாகிகளை நீக்கிவிட்டு கிளை மற்றும் கேந்திரத்தை கலைத்து விட்டு சுயநலத்தோடு தன்னுடைய சொந்த நிறுவனம் போல் கடந்த ஆறு மாதங்களாக கட்சியை தவறாக வழி நடத்தி முதல் முறையாக ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு புதுச்சேரி தலைவர் திரு.செல்வகணபதி அவர்களே முழு காரணம். எனவே தார்மீக பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த முறை லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எட்டாயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் வாங்கி இரண்டாம் இடத்திற்கு வந்த என்னை தேர்தலில் பணியாற்ற விடாமல் சதி செய்து லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து "என் தொகுதி நான் வைத்தது தான் சட்டம்" என்று சுயநலமாக சிந்தித்து மட்டுமல்லாமல் பல நிர்வாகிகளை தொகுதியில் வேலை செய்ய விடாமல் தடுத்து புதுச்சேரியின் பாராளுமன்ற உறுப்பினரை காங்கிரசுக்கு தாரை வார்த்த பெருமை திரு. செல்வகணபதி சேரும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், இது சம்பந்தமாக தேசிய தலைமை ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டு மொத்தமாக ஆயிரக்கணக்கான பழைய நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு சித்தாந்த ரீதியாக இல்லாமல் புதியவர்களை நியமித்து தனக்குத்தானே மாபெரும் தலைவர் என்று நினைப்பது சரியல்ல. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்து பாரதி ஜனதா கட்சியை படிப்படியாக வளர்த்தார்கள். ஆனால் இன்று திரு.செல்வகணபதி அவர்கள் பாரதி ஜனதா கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றாமல் குறுக்கு வழியில் நியமன சட்டமன்ற உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை அனுபவித்து ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த மாநில தலைவரை உடனடியாக தேசிய தலைமை மாற்ற வேண்டும் ஓட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...