முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரைக்கால் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் எதிர் வரும் 03-06-2022 வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணி அளவில் காரைக்காலில் உள்ள காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் காரைக்கால் மாண்புமிகு மாவட்டத்தைச் போக்குவரத்து சார்ந்த துறை மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் முடிவிற்கு அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நாள்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு நகர பகுதி முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது. குடிநீர் பற்றாக்குறையால் நகர பகுதிக்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டுவருவது என தெரியாமல் அரசு விழித்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் சுற்றுலா நகரமாக மாறி வருவதால் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் பெருகி, தண்ணீர் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த அரசு, புதுச்சேரி மாநிலத்தில் மாசு ஏற்படுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும், மக்களுக்கு தீங்கு இழைக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தரமாட்டோம் என சட்டசபையிலேயே வாக்குறுதி அளித்துள்ளது. இத்தகைய சூழலில் புதுச்சேரியின் வருவாயை பெருக்குவதாக கூறி, சுமார் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசின் கலால்துறையும் வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், நகர மக்கள...

ரூ 35 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலைகள்!

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், சுமார் 35 லட்சம் செலவில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமிபூஜை செய்து  துவக்கி வைத்தார் புதுச்சேரி நகராட்சி மூலம்,முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட  சோலை நகர் தாழை வீதி, பெருமாள் கோயில் வீதி விரிவு, காட்டாமணி குப்பம் இணைப்பு சாலை உட்பட்ட பகுதிகளில், சுமார் 35 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில்  சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா,இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உட்பட தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வெங்கடாஜலபதி தலைமையில், ட்ரீம் மனநல மையத்தில் கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது புதுச்சேரி பிரத்தியங்கா காளி கோயில் அருகே உள்ள ட்ரீம் மனநல மையத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வெங்கடாஜலபதி ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி,மனநல மையத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ட்ரீம் மனநல மையத்தின் நிறுவனர் ரவி வர்மா, மேலாளர் முருகன்,காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பாலா ,பெருமாள் ,குமார்,பாபு ,மூர்த்தி மற்றும் லாஸ்பேட் காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயபாஸ்கர் ,தமிழரசன் ,பாலாஜி ,சரவணன் ,ராஜேஷ், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

முத்தியால்பேட்டை தொகுதியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் விழா...

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட முதியோர்,விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் ஆணையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பிரகாஷ் குமார் பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட விதவை, முதியோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் உட்பட 76 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசு ஆணை வழங்கும் விழா முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசு ஆணையை வழங்கினார். அதனை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு சிகப்பு நிற குடும்ப அட்டை,50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் சமூக நலத்துறை மூலம் பார்வை இழந்த 2 பயனாளிகளுக்கு வா...

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்கும் நிகழ்வு துவக்கம்...

புதுச்சேரி மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார் புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ.5,500/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.  மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு ஆண்டிற்கு முதற்கட்டமாக 16917 மீனவ குடும்பங்களுக்கு ரூபாய் 9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையினை மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். மேற்படி தொகையானது புதுச்சேரி பகுதியைச்சேர்ந்த 8287 குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 3265 குடும்பங்களுக்கும் மற்றும் ஏனாம் பகுதியைச்சேர்ந்த 4870 குடும்பங்களுக்கும் இன்று முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மாஹே பகுதியைச்சேர்ந்த 495 ...

ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி துவக்கம்..

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்  புதுச்சேரி  பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் குடிநீர் வழங்கல் பிரிவு மூலம், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியான   முடக்கு மாரியம்மன் கோயில் தெரு,  புதுத்தெரு, பகவத்சிங் வீதி, கருணாநிதி வீதி,  கல்வே பங்களா ஆகிய பகுதிகளில் ரூபாய்.15 லட்சம் செலவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில்  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.  இவ்விழாவில்  பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர்  முருகானாந்தம், பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர்  வாசு, இளநிலைபொறியாளர் வெங்கடேசன் மற்ற...

ரூ.20 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் துவக்கம்!

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில்,ரூ 20 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட காந்தி வீதி மற்றும் செயின்ட் ரோசாரியோ வீதியை ஒட்டியுள்ள செவராயப்பேட்டை பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் செலவில், உட்புற சாலைகளுக்கு புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.  இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா மற்றும் இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் நடிகர் கார்த்தி பிறந்தநாள் விழா!

நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் வில்லியனூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பில், கார்த்தி பிறந்தநாள் விழா வில்லியனூர் பகுதியில் கொண்டாடப்பட்டது. மாநில கௌரவத் தலைவர் கலியபெருமாள் ஆலோசனைப்படி, இளைஞரணி தலைவர் ராஜேஷ் தலைமையில், வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பிரகாஷ், மன்றத்தின் நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய மின்மாற்றி அமைக்கும் பணி துவக்கம்!

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட மந்தவெளி மாரியம்மன் கோவில் அருகில் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட கசாப்புக்காரன் தோப்பு, கலைவாணர் வீதி, பட்டினத்தார் கார்டன், அரவிந்தர் கார்டன், மந்தவெளி மாரியம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் வினியோகம் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமாரை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் உடனடியாக அப்பகுதியில் புதியமின் மாற்றி அமைத்து தருமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து ரூபாய் 20 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று மந்தவெளி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து ...

வதந்திகளை நம்பாதீர்கள்! பிரகாஷ் குமார் எம்எல்ஏ விளக்கம்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நமது புதுச்சேரி எழில்மிகு நகரம் அது தற்போது பொலிவுறும் நகரம் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற பகுதியில் குறிப்பாக முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளை கடந்த ஆட்சிக்காலத்தில் மேதகு துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது. தற்போது சில மாற்றுக் கட்சியினர் மேற்படி சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக புரளியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் வதந்தி ஆகும். இது சம்பந்தமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  பிரகாஷ் குமார்  நேற்று 23/5/2022 அன்று  முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளை முத்தியால்பேட்டை தொகுதிக்கு கொண்டுவரும் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுக...

முத்தியால்பேட்டையில் மீண்டும் சாராயக்கடை; அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். நகரத்தையொட்டி வளர்ந்து வரும் பகுதியான முத்தியால்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டுவர வேண்டும் என சட்டசபையில் நான் குரல் கொடுத்தேன். இதன் விளைவாக ரூ.120 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 2018ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டது. திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஸமார்ட் சிட்டி சட்டதிட்டத்தின்படியும், ஏழை தாய்மார்களின் கோரிக்கையை ஏற்றும் முத்தியால்பேட்டை தொகுதியில் காட்டாமணிக்குப்பம் சாராயக்கடை, புளியமரத்து சாராயக்கடைஆகிய இடங்களில் இருந்த சாராயக்கடைகள் பலகட்ட போராட்டத்துக்கு பின் அகற்றப்பட்டது. இதனால் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏழை, நடுத்தர குடும்ப தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தனர்.  இந்நிலையில் மீண்டும் முத்தியால்பேட்டையில் சாராயக்கட...

ரமேஷ் பரமத் எம்எல்ஏ பிறந்தநாள் விழா

ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரமத்  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ராகுல் காந்தி தேசியப் பேரவை மற்றும்  இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரமத்  பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.ஈ சேகர் தலைமையில், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிரபு முன்னிலையில்,நைனார்மண்டபம் ஸ்ரீ துலுக்காணத்தம்மன்  ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி  செயலாளர்கள்  தங்கமணி, சரவணன் ,RE  வாசுதேவன்,  மாநில இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், புதுச்சேரி மாநில     காங்கிரஸ்  கமிட்டி உறுப்பினர் பாபுலால், உருளையன்பேட்டை   வட்டாரக் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம்,  புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி சாந்தி, புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆனந்த...