முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட மந்தவெளி மாரியம்மன் கோவில் அருகில் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட கசாப்புக்காரன் தோப்பு, கலைவாணர் வீதி, பட்டினத்தார் கார்டன், அரவிந்தர் கார்டன், மந்தவெளி மாரியம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் வினியோகம் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமாரை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் உடனடியாக அப்பகுதியில் புதியமின் மாற்றி அமைத்து தருமாறு வலியுறுத்தினார்.
இதனையடுத்து ரூபாய் 20 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று மந்தவெளி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக