புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி பெரியமார்க்கெட் எனப்படும் குபேர் மார்க்கெட்டை இடித்துக்கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் பெரியமார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றித்தர வேண்டும். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நான்கு கட்டமாக பிரித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். *தன்னை கலந்து ஆலோசிக்காமல் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரே குற்றம்சாட்டியுள்ளார். எனவே வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ப கட்டிடத்தின் வரைபடங்களை புதிதாக மாற்ற வேண்டும்.* இந்த வரைபட தயாரிப்பின்போது பெரியமார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப புதிய வரைபடம் தயாரித்த பின்னர்தான் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பெரியமார்க்கெட் கட்டுமான பணியினால் அங்கு கடை வைத்துள்ள வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். *அரசு திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்க முடியுமா? என்பது சந்தேகமாக உள்ளது. பெ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.