சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் டைல்ஸ்,சிமெண்ட் கற்களால் கொடுரமாக அடித்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்கி.(35). ஓரிரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கைகள் விக்கி மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் ஒருவரின் மரண துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சவ ஊர்வலத்தில் விக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் விக்கிக்கும் வாய் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த டைல்ஸ் சிமெண்ட் உள்ளிட்ட பெரிய கற்களால் விக்கியை கொடுரமாக தாக்கியது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தடுக்க முயன்ற போது அந்த கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.