முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது புதுச்சேரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெட்டபாக்கம் - ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முதியவர் தாண்டவராயனை(70) பாகூர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் தாண்டவராயனுக்கு (70) 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஷோபனா தேவி தீர்ப்பளித்தார்.மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.

பாகூரை சுடுகாடாக்க பாஜக, நமச்சிவாயம் சதி..! அதிமுக குற்றச்சாட்டு...

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி கூட்டணி வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பாகூர் சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது,      மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, காங்கிரஸ் எந்த அரசாக இருந்தாலும் தமிழ் சமுதாய மக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து இவ்விரண்டு தேசிய கட்சிகளாலும் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே தான் தமிழர் உரிமைகளை மீட்கவும், புதுச்சேரியை காப்பாற்றவும் அதிமுக தேசிய கட்சிகளை தவிர்த்து கூட்டணி அமைக்காமல் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.      இந்த பாகூர் சட்டமன்ற தொகுதி என்பது புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகும். ஆனால் தற்போது விவசாய விளை நிலங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதை தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். நன்கு லாபத்தில் இயங்க கூடிய சுமார் இருபதாயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை புதுச்சேரி அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து தனியாரிடம் விற்பனை செய்துள்ளது. அதற்கு முதல் காரணம் நமது பாகூர் ...

நன்றி மறந்த நமச்சிவாயம்... சுட்டிக்காட்டிய அதிமுக...

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி கூட்டணி வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது, நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நமச்சிவாயம் அவர்கள் விருப்பமின்றி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த மண்ணாடிப்பட்டு தொகுதி என்பது மாநில உள்துறை அமைச்சரின் தொகுதியாகும். ஏற்கனவே அவர் வில்லியனூரில் இருந்து இந்த தொகுதிக்கு மாறி நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணி செய்தனர். அவரும் வெற்றி பெற்று உள்துறை அமைச்சர் ஆனார். அவர் உள்துறை அமைச்சர் ஆனவுடன் நிறைய இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அவரிடம் சென்று வருகின்றனர். உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் அவர் டெல்லிக்கு பாராளுமன்ற உறுப்பினராக சென்று விடுவார். சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருக்கும் சூழ்நிலையில் நமச்சிவாயத்திற்காக ஏற்கனவே உழைத்தவர்கள் நிற்கதியின்றி நிற்கும் சூழ்நிலை ஏற்படும். இவை அன...