புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் ஆட்சி செய்யும் எந்த அரசாக இருந்தாலும் மதுபான கொள்கையில் தள்ளாட்டத்துடன் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த போதுமான வருவாய் தேவை என்ற நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மதுபான கொள்கையில் சரியான நடவடிக்கையை அரசு எடுத்தால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு சிலருடைய நன்மைக்காகவும் ஒருசிலர் அரசியல் கட்சியில் உள்ள இந்த தொழில் புரிபோரின் நலனுக்காகவும் திட்டமிட்டு அரசு அரசுக்கு வரவேண்டிய வருவாயை தொடர்ந்து இழந்து வருகிறது. புதுச்செரியில் 8-க்கும் மேற்பட்ட டிஸ்ரிகள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யும் சரக்குகள், வெளிமாநிலங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பிராண்டு சரக்குகளை அரசே கொள்முதல் செய்து, அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் 1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். 1989-ம் ஆ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.