முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுபானத்திற்கு அரசு சார்பில் தனி கார்ப்பரேஷன் அமைக்க அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் ஆட்சி செய்யும் எந்த அரசாக இருந்தாலும் மதுபான கொள்கையில் தள்ளாட்டத்துடன் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த போதுமான வருவாய் தேவை என்ற நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மதுபான கொள்கையில் சரியான நடவடிக்கையை அரசு எடுத்தால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு சிலருடைய நன்மைக்காகவும் ஒருசிலர் அரசியல் கட்சியில் உள்ள இந்த தொழில் புரிபோரின் நலனுக்காகவும் திட்டமிட்டு அரசு அரசுக்கு வரவேண்டிய வருவாயை தொடர்ந்து இழந்து வருகிறது.

புதுச்செரியில் 8-க்கும் மேற்பட்ட டிஸ்ரிகள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யும் சரக்குகள், வெளிமாநிலங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பிராண்டு சரக்குகளை அரசே கொள்முதல் செய்து, அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் 1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

1989-ம் ஆண்டு மக்கள் தொக்குக்கு ஏற்ப மொத்த மதுபான விற்பனை கடை FL-1 சுமார் 80-க்கும், சில்லரை மதுபான விற்பனை கடை FL-2 சுமார் 250-க்கும் லைசன்ஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த தனியாருக்கும் சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும். தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டூரிஸ்ட் லைசன்ஸ் என்பது 15 ஏசி ரூம் மற்றும் 300 சதுர அடி ஹால் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதுபோன்ற வசதிகள் இல்லாதவர்களுக்கும் டூரிஸ்ட் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தான் அனைவரும் ரெஸ்டோபார் என்று சொல்லிக்கொண்டு பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர். ரெஸ்டோ பார் என்ற பெயரில் இதுவரை கலால்துறை லைசன்ஸ் வழங்காத சூழ்நிலையில் இதை கூட மக்களிடம் கலால்துறை தெளிவுபடுத்தவில்லை.

இந்த டூரிஸ்ட் லைசன்ஸ்களுக்கு ஒரு வருடத்திற்கு 6 லட்சம் வீதம் மொத்தமுள்ள 155 லைசன்சுக்கும் சுமார் 10 கோடி ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். ஆனால் புதியதாக 100 FL-2 லைசன்சுகளை ஏலம் விட்டாலே குறைந்த்து ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரும்.. அதையும் அரசு செய்யவில்லை. கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் விடுவது போன்று மதுபான விற்பனை உரிமத்தையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விட்டால் தற்போது உள்ளதை விட பல மடங்கு வருவாய் வரும். அதையும் அரசு செய்யவில்லை.

முதலமைச்சரின் கன்னோட்டத்தில் மாற்றம் தேவை. மக்களுக்க தொல்லை கொடுக்கும் வகையில் உள்ள டூரிஸ்ட் பாரை ரத்து செய்துவிட்டு எப்.எல்.2 ஏலம் கொடுத்து 100 லைசன்ஸ் கொடுத்தால் 340 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கும். முதலமைச்சரிடம் துறையின் அதிகாரிகள் சரியான விபரத்தை எடுத்துக் கூறாத்தால் அரசின் வருமானம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு என்று தனி பார் என்ற விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் பீர் பஸ் இயக்கப்படும் என கட்டுமரான் என்ற பீர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளனர்.

புதுச்சேரி கலால் சட்டம் 1970 கலால் விதி எண் 192 (2)ன் படி மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை சம்பந்தப்ட்ட எந்தவித சிறு விளம்பரங்களும் செய்யக்கூடாது. மதுபானம் தொட்பான விளம்பர பதாகைகள், மதுபான விற்பனைக்கு பரிசு பொருட்கள், செய்தி தாளில் விளம்பரம், சமூக வலைதளங்களில் விளம்பரம் ஆகியவை சட்டத்திற்கு விரோதமானது.

பீர் பஸ்சுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இவர்கள் மிது ஏன் கலால்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்சமாக அவர்களின் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து இருக்கலாம். புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஒன்ற சேர்ந்து குடிப்பது. அரசுக்கு சொந்தமான பொது இடங்களிலும் மது குடிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

கலால்துறை சார்பில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால். யார் கொடுத்தது. இதுகுறித்து அரசு உரிய விளக்கத்தை அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார்,, மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...