முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. 

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது.

மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா நாட்டின் மிக முக்கியமான பதவி வகிக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

பல்லாயிரம் கோடி போலி மருந்துகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதை காவல்துறையின் விசாரணை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தின் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட IFS அதிகாரி சத்தியமூர்த்தி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதோடு ஆளுநர் அவர்களையும் இந்த விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதில் தவறு இல்லை என நினைக்கிறோம். 

மேலும் இந்த வழக்கை CBI, NIA விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் வைத்து வருகின்றனர் ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் CBI, NIA விசாரணை நடத்திய எந்த வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது என்ற கேள்வியை எமது அமைப்பு முன் வைக்கிறது. இதற்கு பதில் இந்த வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு போன்ற நேர்மை தவறாத நீதியரசர்கள் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மனித உரிமை ஆர்வலர்களை உட்கொண்ட கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறோம்.
மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி புதுச்சேரி மாநில சபாநாயகர் அவர்களுடன் எந்த நோக்கத்திற்காக மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களையும் சட்ட அமைச்சர் அவர்களையும் சந்தித்தார் என்ற உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள சத்தியமூர்த்தி அவர்களோடு ஆளுநருக்கு எத்தகைய உறவு இருந்தது என்பதனையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
             

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...