* பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி குற்றச்சாட்டு வைத்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது* புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருகட்சிகள் இடையே பேச்சுவார்த்தை இன்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், "அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை. சரியாக செயல்படதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சியினரை விமர்சிக்காமல் சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்னைகளை தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோ” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், சபாநாயகருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு, பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய வீடியோ ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.