*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் பிறந்தநாளையொட்டி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி ராஜி என்கிற அழகப்பன் தலைமையில் 50 கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்*
அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் பிறந்தநாள் விழா, என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி கொட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்கிற அழகப்பன் ஏற்பாட்டில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக,என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராஜி என்கிற அழகப்பன் தலைமையில், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 50கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள 100கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக