முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் மின் கட்டண ரசீது வழங்க காங்கிரஸ் ஊடகப்பிரிவு வலியுறுத்தல்

புதுச்சேரி காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவர் கோர்க்காடு அசோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் மின் கட்டணம் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் கட்டண ரசீதில் பல தலைப்புகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அது அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் எது, எதற்கு கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்று கூட மின் நுகர்வோர்களுக்கு தெரிவதில்லை. எனவே முதலில் நுகர்வோர்களுக்கு எது, எதற்கு கட்டணம் வசூலிக்கின்றோம் என்பதை தெரிவிக்கும் வகையில் தமிழில் மின் கட்டண ரசீது வழங்க வேண்டும்.  அதுபோல் மின் கட்டண உயர்வுக்கு அரசு த்துறைகள் மற்றும் பெரிய, பெரிய தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மின் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.  பழைய நிலுவை கட்டணங்களை வசூலிக்க அரசு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அந்த முகாமில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் பெரும்பாலான நிறுவனங்கள், தனி நபர்கள் மின் கட்டண பாக்கியை விரைந்து செலுத்த முன் வருவார்கள். ...