பாயிண்ட் ரேஞ்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.! டைரக்டர் சைனு சாவக்கடனின் பாயிண்ட் ரேஞ்ச் (Point Range) படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்படப்பிடிப்பு கோழிக்கோடு, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் நடந்தது. டி எம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரின் கீழ் ஷிஜி முஹம்மது மற்றும் தியம்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பாயிண்ட் ரேஞ்ச், ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம், இத்திரைப்படத்தை சுதீர் 3டி கிராஃப்ட் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் நடிகர்கள்- சரத் அப்பானி, ரியாஸ் கான், ஹரிஷ் பெராடி, சார்மிளா, முகமது ஷாரிக், சனல் அமன், ஷபிக் ரஹிமான், ஜோய் ஜான் அந்தோணி, அருள் டி. சங்கர், ராஜேஷ் சர்மா, அரிஸ்டோ சுரேஷ், பிஜு கரில் (கவன் ராய்), பிரேம்குமார் வெஞ்சரமூட், டயானா ஹமீத், சுமி சென், ஃபெஸ்ஸி பிரஜீஷ் மற்றும் முன்னணி மலையாளம், தமிழ் மற்றும் இதர மொழி நட்சத்திரங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். மிதுன் சுப்ரான் எழுதிய கதைக்கு போனி அசனார்...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.