முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுச்சேரி அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

புதுச்சேரிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பற்றி பேசிய வார்த்தைகள் அனாகரிகமான அறுவறுக்கத்தக்க செயலாகும். எந்த ஒரு மாநில முதலமைச்சரும் பிற மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநில முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது ஸ்டாலினின் தகுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், பதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநருடன் இணக்கமாக செயல்படுவது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாகும். அந்த வகையில் முதுலமைச்சர் மத்திய அரசிடமும், துணைநிலை அளுநரிடமும் இணக்கமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி ஒரு நல்லாட்சி நடத்தி வருகிறார்.

ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் தகுதியில் துணைநிலை ஆளுநரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என தமிழக முதுலமைச்சர் பேசியது அறைவேக்காட்டு தனமான செயலாகும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர் முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் பென்ஷன் 2,500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறார். ஆனால் தமிழகத்தில் 1000 ரூபாய் தான் வழங்குகிறீர்கள். குடும்ப பெண்களுக்க மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறினீர்கள் இதுவரை வழங்கவல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3000 வழங்கும் ஒரே அரசு புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு. எனவே எங்களின் அரசை பற்றியும், முதலமைச்சரை பற்றியும் தமிழக முதலமைச்சர் தரம் தாழ்ந்து விமர்சித்ததை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. துணைநிலை ஆளுநர் யார், அவரது அதிகாரம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

ஆளுநரை பற்றி பேசினால் தான் இந்தியா முழுவதும் தெரிவார் என்பதால இப்படி பேசுகிறர். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநரிடம் முறையிட்டவர் தான் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா?

கடந்த கால காங்கிரஸ் திமுக ஆட்சிய புதுச்சேரி மாநிலத்திற்கான இருண்ட ஆட்சி. மாநில வளரச்சியை பின்னுக்கு தள்ளியது தான் கடந்த கால ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா.

திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின் குடும்ப ஆட்சி. குடும்ப நலனுக்கான ஆட்சி.

புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என திமுக அமைப்பாளர் சிவா கூறியபோது கடுமையாக விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது அது அவர்களது விருப்பம் என நாராயணசாமி மழுப்பலாக கூறுகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக திமுக ஸ்டாலினிடம் அடமானம் வைத்துவிட்டார். அவருடைய கருத்தை இப்போ உள்ள காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிக்கள் ஏற்றுக்கொண்டார்களா? புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்கிறார்களா?

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நாராயணசாமி இதுவரை அதற்கான ஆதாரத்துடன் நிரூபித்தாரா? வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவது தவறானது. நாராயணசாமியிடம் எந்த காலகட்டத்திலும் அரசியல் ரீதியான மரியாதையை எதிர்பார்க்க முடியாது. நாம் என்ன விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்வோம்.

காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நிகழ்வு அதிபயங்கரமான ஒரு விபத்தாகும். அந்த நிறுவனம் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ரசாயானங்களை உற்பத்தி செய்கிறது.

இந்த சம்பவம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்சனை மூடி மறைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கி அதை மூடி மறைப்பது சரியில்லை. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ரசாயானம் தயார் செய்வதை கண்காணிக்கும் துறையினர் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. அந்த தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலைகயில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுப்சாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...