முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டதொடர் ஆகஸ்ட் 10 - ஆம் தேதி தொடங்குகிறது!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார் புதுச்சேரி சட்டமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் செல்வம், புதுச்சேரி 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும், முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்வார் என தெரிவித்தார். அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும் என்றும் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருவதாக தெரிவித்த அவர், 2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும் என குறிப்பிட்டார்.  ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை ...

உழவர்கரையில் யாஷ் ரசிகர் மன்றத்தின் திறப்பு விழா!

உழவர்கரை தொகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர் மன்றத்தின் துவக்க விழா விமர்சையாக நடைபெற்றது புதுச்சேரி உழவர் கரை பகுதியில் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் ஒப்புதலோடு, மன்றத்தின் மூன்றாவது கிளை துவக்க விழா நடைபெற்றது. மன்றத்தின் தலைவர் ஷர்மா தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை மன்றத்தின் நிர்வாக தலைமை அதிகாரி வருண், துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன், மாநில தலைவர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை மன்றத்தின் பொறுப்பாளர்கள் உமா சங்கர், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் முகிலன், பொருளாளர் சுபாஷ், துணைத் தலைவர் சசிதரன், செயலாளர்கள் சங்கர் கணேஷ், மருது மற்றும் அருள், கிஷோர், பிரான்சிஸ், ஆனந்த்ராஜ் உட்பட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையில் இடம் பிடித்தது இரவின் நிழல் திரைப்படம்!

உலகத்தின் முதல் நான் லைனர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் படத்திற்கு அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது உலகத்தில் முதல் முறையாக இரவின் நிழல் என்ற தமிழ் படம் நான் லைனர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தற்போது திரையரங்கை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அக்கிரா புரொடக்ஷன் தயாரிப்பில், நடிகரும் இயக்குனருமான, தேசிய விருதாளர் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வில்சன் செய்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி பல்வேறு பரப்பினரடையும் வரவேற்பை பெற்றதோடு பல்வேறு சாதனையும் படைத்து வருகிறது. இந்த நிலையில் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையில் இத்தரை படம் இடம் பிடித்துள்ளது. புதுச்சேரி பிராவிடன்ஸ் மாலில் வெளியாகி உள்ள இரவின் நிழல் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களிடையே இயக்குனர் பார்த்திபன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அசிஸ்ட் வேல்ர்ட் ரெகார்ட் நிறுவனர் ராஜேந்திரன், இரவின் நிழல் படத்திற்காக அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சா...

புதுச்சேரியில் இரட்டைக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை மனு!

 காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெறப்பட்ட தகவலின் படி ஆளுநர், பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், புதுச்சேரியில் அனைத்து உபயோகத்திற்கும் குடிநீரையே உபயோகப்படுத்தப் படுவதால் தினசரி நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் செயல்பாட்டில் இருந்த ஆழ்துளை கிணறுகள் உப்பு கலந்து தரமற்ற குடிநீராக மாறிவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், இதுகுறித்து பொதுப்பணித்துறையில் RTI மூலம் தகவல்களாக கேட்டதற்கு அவர்கள்; புதுச்சேரி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய 361 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 25 ஆழ்துளை குழாய் கிணறுகள் உப்புத்தன்மை உள்ள நீராக மாறிவிட்டதாகவும், தினசரி குடிநீர் விநியோகத்திற்கு 109.1 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் எடுப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர். இதன்படி பார்க்கும்பட்சத்தில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் ஒரு நபருக்கு தினசரி சுமார் 150 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவது தெரிகிறது. சராசர...

20 ஆண்டுகளாக கண்டுக்கொள்ளப்படாத கோயில்! 50 ஆயிரம் நிதி அளித்த அனிபால் கென்னடி எம்எல்ஏ!

* உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வேதவள்ளி மாரியம்மன் ஆலய புணரமைப்பு பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி 50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்* புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வேதவள்ளி நகர் முஸ்லிம் கல்லறை வீதியில்,50 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ வேதவள்ளி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியை நேரில் சந்தித்து, கடந்த 20 வருடங்களாக அதிகாரத்தில் இருந்தவர்களும் அதிகாரிகளும் ஆலயத்தை புனரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தங்களால் முடிந்த உதவியை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை எடுத்து நேரடியாக கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, ஆலயத்தின் உண்மை நிலை அறிந்து 50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆலய புணரமைப்பு பணி நடைபெறாமல் இருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி 50 ஆயிரம் நன்கொடை வழங்கியதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தொகு...

துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா

புதுச்சேரி கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர் புதுச்சேரி காமராஜர் சாலை ஜெயராம் ஹோட்டல் எதிரே கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து அம்மன் சிவ பெருமான் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்  பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கடந்த 30 ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

புதுச்சேரியில் 200-ஐ தாண்டிய கொரானா பாதிப்பு!

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் 213 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி சார்ந்த 174 நபருக்கும், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தமாக 213 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1048 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,68,487 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,65,477 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

முத்தியால்பேட்டையில் 20 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு!

புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுமார் 39 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பிரகாஷ் குமார் பொறுப்பேற்ற ஓராண்டில்,  முத்தியால்பேட்டை தொகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கும் ஒவ்வொன்றாக தீர்வு காணப்பட்டு,முத்தியால்பேட்டை தொகுதி வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்கிறது.  முத்தியால்பேட்டை தொகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில் தொகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமாரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பிரகாஷ் எம்எல்ஏ-வின் தீவிர முயற்சியால் தற்போது 20 ஆண்டு கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட குட்டிக்கிராமணி வீதியில் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மற்றும் சோலை நகரைச் சார்ந்த முக்கிய வீதிகளில் சுமார் 32 லட்சம் ச...

ஜனாதிபதி தேர்தல்; புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க போகிறது.. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார்.இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனையடுத்து கடந்த வாரம் புதுச்சேரி வந்த திரௌபதி முர்மு,முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் லட்சுமி நாராயணன்,துணை பொருப்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், வாக்குச்சாவடி ஏஜன்ட்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், லட்சுமி காந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதுச்ச...

புதுச்சேரியில் இன்றைய (12-07-2022) கொரானா நிலவரம்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 127 நபர்களுக்கும், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தமாக 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 915 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,67,879 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,65,002 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

முதலியார்பேட்டையில் யாஷ் தலைமை ரசிகர் மன்றம் துவக்கம்

முதலியார்பேட்டை பகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் இரண்டாவது கிளையின் பெயர் பலகை திறப்பு விழா துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் இரண்டாவது கிளை துவக்க விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. மன்றத்தின் துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மன்றத்தின் செயல் அதிகாரி வருண், தலைவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர் மன்ற பெயர் பலகையை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் முகிலன்,பொருளாளர் சுபாஷ், துணைத் தலைவர் சசிதரன், செயலாளர்கள் சங்கர் கணேஷ்,மருது மற்றும் அருள், கிஷோர், பிரான்ஸிஸ்,ஆனந்த்ராஜ் உட்பட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வளர்ச்சி பாதையில் உப்பளம் தொகுதி!அனிபால் கென்னடி எம்எல்ஏ அசத்தல்!

உப்பளம் தொகுதிக்குட்பட்ட 14 இடங்களில் செயல்படாத ஹைமாஸ் விளக்குகளை உடனடியாக சரி செய்து தருமாறு மின்துறை பிரிவு அதிகாரியை சந்தித்து கென்னடி எம்எல்ஏ வலியுறுத்தினார் புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிபால் கென்னடி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று ஓராண்டில் உப்பளம் தொகுதியில் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட சுமார் 14-கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஹை மாஸ் மற்றும் தெருவிளக்குகள் செயல்படாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியை சந்தித்து தொகுதி மக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மின்துறை ஹா மாஸ் பிரிவு அதிகாரியை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்க கூடிய தொகுதி என்றும், ஹை மாஸ் விளக்குகள் எறியாததால் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நிலவி வருகிறது என தெரிவித்த அவர், போர்க்கால அடிப்படையில் விரைந்து ஹைமாஸ...

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்துக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சாரம் அவ்வை திடலில் நடைபெற்றது சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதைபூரி நகரில் கண்ணையா லால் என்பவரும், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் உமேஷ் ஹொக்லே என்பவரும் பயங்கிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுச்சேரி மாநில தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் இளங்கோ முன்னிலைவகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சமூதாய நல்லிணக்க வட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் புதுச்சேரி செயலாளர் ரவிவர்மன், இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன், பஞ்ரங்தள் பொறுப்பாளர் சதீஷ், புருஷோத்தமன்,ரவி அண்ணாமலை, கோ-ரக்ஷா இணை பொறுப்பாளர் குருசாமி, சமூதாய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், இணை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், துர...

மணவெளி அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்; பணியை துவக்கி வைத்தார் சபாநாயகர் செல்வம்!

மணவெளி தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 50 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணியை சட்டப்பேரவை தலைவர் செல்வம் துவக்கி வைத்தார் புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் மணவெளி தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 50 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை தலைவருமான செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஓட்டுக்காக மட்டும் காரைக்கால் செல்லும் ரங்கசாமி! அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: சுத்தமான குடிநீர், சுகாதாரமான இருப்பிடத்தை வழங்க வேண்டியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அரசின் கடமையாகும். ஆனால் காரைக்கால் மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வழங்க அரசு தவறிவிட்டது. பல ஆண்டுகளை கடந்த, பயனற்றுப்போன குடிநீர் குழாய்கள் உடைந்து அதில் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த குடிநீரை குடித்த அப்பாவி காரைக்கால் மாவட்ட மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு என காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதை மூடி மறைக்கும் வகையில் இணைநோய்களால் இறந்துவிட்டதாக சுகாதாரத்துறையினர் பூசி மெழுக பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மக்கள் சகஜமான வாழ்க்கையைக்கூட வாழ முடியாத நிலைக்கு அரசு தள்ளி உள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேடும், நிர்வாக திறமையின்மையும்தான் காரண...