புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுமார் 39 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பிரகாஷ் குமார் பொறுப்பேற்ற ஓராண்டில், முத்தியால்பேட்டை தொகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கும் ஒவ்வொன்றாக தீர்வு காணப்பட்டு,முத்தியால்பேட்டை தொகுதி வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்கிறது.
முத்தியால்பேட்டை தொகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில் தொகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமாரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து பிரகாஷ் எம்எல்ஏ-வின் தீவிர முயற்சியால் தற்போது 20 ஆண்டு கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட குட்டிக்கிராமணி வீதியில் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மற்றும் சோலை நகரைச் சார்ந்த முக்கிய வீதிகளில் சுமார் 32 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பிரகாஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக