புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் தொடர்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுக்கு ஆதரவாக புதுச்சேரி முதலமைச்சரும், அவரின் உத்தரவின்பேரில் சென்டாக் நிர்வாகத்தில் பல ஆண்டாக தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகளும் செயல்படுகின்றனர். இதற்கு சாட்சியாக சென்டாக் அலுவலகம் எதிரே தனியார் கல்லூரி நிர்வாகியுடன், சென்டாக்கின் மூத்த அதிகாரி காரில் அமர்ந்து பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைப்போல பல்வேறு குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2 முறை புதுடில்லி சிபிஐ இயக்குனருக்கு ஆதாரங்களுடன் புகாரும் அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் அண்ணனை காப்பாற்றும் வகையில் பாசமலரான தங்கை மேதகு துணை நிலை ஆளுநர் தமிழிசை, அதிமுகவின் புகாரை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறார். புதுச்சேரியில் மாணவர்கள் நலனுக்காகவே அரசு செயல்படுகிறது என்றும் எந்த ஊழலும்...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.