பாவணர் நகர் ஸ்ரீ ஜலகண்ட முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக பொருளாதார பிரிவு மாநில அமைப்பாளர் பிரபாதேவி வீரராகு,100கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை உட்பட மாங்கல்ய பொருட்களை வழங்கினார்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாநில அமைப்பாளர் பிரபாதேவி வீரராகு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மகளிரை ஊக்கப்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது,ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு நிதி அளிப்பது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது என தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னலமின்றி சேவை செய்து வருகிறார்.
இதனிடையே உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பாவணர் நகர் ஸ்ரீ ஜலகண்ட முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் அறங்காவல் குழு சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் விழாவில் கலந்து கொண்ட 100கும் மேற்பட்ட சுமங்கலி பெண்களுக்கு புடவை உட்பட மாங்கல்ய பொருட்களை வழங்கினார்.அதன் பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பாஜக நிர்வாகி கோமதி மற்றும் பாஜக பொருளாதார பிரிவு மாநில நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக