முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மின்துறை தனியார் மய போராட்டக்குழு பதிலடி..!

புதுவை மின்துறை தனியார்மய மற்றும் கார்ப்ரேஷன் மய எதிர்ப்பு போராட்ட குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை 300 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டு இருந்தார்  புதுவை மின்துறை நஷ்டத்தில் இயங்குகிறது மேலும் அதனை புனரமைக்க நிதி தேவைப்படுகிறது என்கிற காரணத்தை கூறி அந்த துறையை தனியார் மயப்படுத்தினால் சிறப்பாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் கடந்த மாதம் புதுவை வந்து சென்றதன் நோக்கம் என்ன? புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை மற்றும் மருத்துவம் துறைமுகம் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைக்க புதுச்சேரி அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது அதன் வெளிப்பாடு தான் தற்போது மின்துறை அமைச்சர் அவர்கள் கூறி இருக்கும் காரணம். மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுவை உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார கம்பெனிகளை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு...

மீனவ சமுதாய மக்களை அலட்சியப்படுத்தும் புதுவை அரசு..

சோலை நகர் வடக்கு பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,கடந்த 2017ஆம் ஆண்டு தூண்டில் முள் அமைக்க மத்திய அரசு வழங்கிய சுமார் 8 கோடி ரூபாய் நிதி எங்கே போனது என கேள்வி எழுப்பிய மீனவர்கள்,உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் வடக்கு பகுதியில் சுமார் 500கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதால் தூண்டில் முள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில்,கடந்த 2017ஆம் மத்திய அரசின் நிதி மூலம் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில் முள் வளைவு அமைக்க அப்போதைய முதல்வர் ரங்கசாமி தலைமையில் பூமி பூஜை நடைப்பெற்றது.அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நிலையில், தூண்டில் முள் வளைவு அமைக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்பிறகு அப்பகுதி மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், புதுவை அரசு எந்தவித நடவடிக்...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; சுயேட்சை எம்எல்ஏ நேரு மீண்டும் குற்றச்சாட்டு...

புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி  உருளையன்பேட்டை தொகுதி, மறைமலை அடிகள் சாலையில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 1980களில் கட்டப்பட்டதாக தெரிகிறது. முன்பு வெள்ளதாங்கி ஐயனார் கோயில் ஏரியாக இருந்த இந்த இடத்தை அப்போதைய அரசு போதுமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி மிக நேர்த்தியாகவும், உறுதித் தன்மையுடையதாக அந்த இடத்தை மாற்றிய பிறகு நல்ல திட்டமிடலுடன் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நடத்தி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட பேருந்து நிலையம் கட்டி முடித்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் எந்தவித சிதைவுகள், விரிசல்கள் ஏற்படாமல் உறுதியுடன் அதன் கட்டுமானங்கள் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் புதுச்சேரியில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், அதிக சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாகவும் பேருந்து பயணிகளுக்கு இட நெருக்கடி ஏற்படுவதை சுட்டிக்காட்டி இந்த பேருந்து நிலையத்தையும், PRTC பணிமனையும் சேர்த்து விரிவாக்கம் செய்ய ஏதுவாக தரைதளத்தில் இயங்கும் PRTC பணிமனையை தற்போது இயங்குவதுபோல் அதை அப்படியே இருக்க செய்து விட்டு அதன்மேல் தளம் அமைத்து...

கடிதம் எழுதுதலை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் பயணம்

கடிதம் எழுதுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் அஞ்சல் துறை குழுவினருக்கு புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இந்திய அளவில் கடிதம் எழுதுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக "தாய் அக்கர்"என்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணி இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் உள்ள இந்திய அஞ்சல் துறை இயக்குனர் திஷா தலைமையில்,16 பேர் கொண்ட பெண்கள் குழுவினர் நாடு முழுவதும் பைக்குகளில் பேரணி செல்கின்றனர். கடந்த 9-ஆம் தேதி பெங்களூருவில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர்கள், பல்வேறு நகரங்களை கடந்து இன்று புதுச்சேரி வந்தனர். கடிதம் எழுதுதல் சம்பந்தமாக அஞ்சல் துறை ஊழியர்களுடன் கலந்து உரையாடிய பின், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலுக்கு வந்த குழு டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதுதலின் அவசியம் குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடியது. மேலும், தபால் அட்...