முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கல்வித் துறையில் கௌரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா போன்ற பணியிடங்கள் அரசு பணியிடங்கள் ஆகும். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மேற்குரிய சுமார் 292 அரசு பணியிடங்கள் சட்டத்துக்கு விரோதமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  சட்டரீதியாகவும் மனிதாபமான அடிப்படையிலையும் இவ்வாறு பணியில் உள்ள ஒப்பந்த ஆசிரியர் பெருமக்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய அரசு பல்வேறு ஓட்டை உடைசல் காரணங்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு நியாயம் வழங்குவதை தடுத்து வந்தது.  அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பு ஊழியர்கள் சம்பந்தமாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்கின் மேல்முறையீட்டில...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...

SIR பணிகளில் ITI மாணவிகள்.! AIUTUC கண்டனம்

ஏஐயூடியூசி புதுச்சேரி மாநில செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம், தொழிலாளர் துறையின் கீழ் வம்பாகீரப்பாளையத்தில் மகளிர் I.T.I. செயல்பட்டு வருகின்றது . இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் . கடந்த ஒரு மாத காலமாக மாணவிகளை தேர்தல் துறையின் S.I.R. படிவங்களை தொகுதியில் வாக்காளர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக மகளிர் I.T.I முதல்வர் ருக்குமணி அனுப்பி வருகின்றார் . இது சட்டவிரோதமானதாகும்.  தொழிலாளர் துறையில் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாணவிகளை அனுப்பி வைத்தாரா அல்லது தேர்தல் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாணவிகளை அனுப்பி வைத்தாரா என்பது குறித்து முதல்வர் ருக்மணியை விசாரணை நடத்த வேண்டும். மாணவிகளை இது போன்ற தேர்தல் துறை படிவங்கள் சரிபார்க்க அனுப்பி உள்ளது சட்டப்படி தவறானதாகும். முதல்வர் ருக்குமணியின் இந்த தவறான செயல்களை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். எனவே , மகளிர் I.T.I. மாணவிகளை முறைகேடாக, சட்ட விரோதமாக S.I.R. படிவங்களை சரிபார்க்க தொகுதிக்கு அனுப்பிய மகளிர் I.T.I முதல்வர் ருக்மணியின...