ஏஐயூடியூசி புதுச்சேரி மாநில செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலம், தொழிலாளர் துறையின் கீழ் வம்பாகீரப்பாளையத்தில் மகளிர் I.T.I. செயல்பட்டு வருகின்றது . இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் . கடந்த ஒரு மாத காலமாக மாணவிகளை தேர்தல் துறையின் S.I.R. படிவங்களை தொகுதியில் வாக்காளர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக மகளிர் I.T.I முதல்வர் ருக்குமணி அனுப்பி வருகின்றார் . இது சட்டவிரோதமானதாகும்.
தொழிலாளர் துறையில் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாணவிகளை அனுப்பி வைத்தாரா அல்லது தேர்தல் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாணவிகளை அனுப்பி வைத்தாரா என்பது குறித்து முதல்வர் ருக்மணியை விசாரணை நடத்த வேண்டும். மாணவிகளை இது போன்ற தேர்தல் துறை படிவங்கள் சரிபார்க்க அனுப்பி உள்ளது சட்டப்படி தவறானதாகும். முதல்வர் ருக்குமணியின் இந்த தவறான செயல்களை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே , மகளிர் I.T.I. மாணவிகளை முறைகேடாக, சட்ட விரோதமாக S.I.R. படிவங்களை சரிபார்க்க தொகுதிக்கு அனுப்பிய மகளிர் I.T.I முதல்வர் ருக்மணியின் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேதகு துணை நிலை ஆளுநருக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக