முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் புதுச்சேரி.! சுயேட்சை எம்எல்ஏ குற்றச்சாட்டு.!

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநிலத்தை உள்ளடக்கிய காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. அதுவே சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கமாகும். மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்தெந்த பகுதியில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டினால் அதை நிவர்த்தி செய்து கொடுக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் IAS அதிகாரிகளும் அந்தெந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆவர். இவர்கள் மக்களுக்கான பிரச்சனைகளில் உள்ள குறைபாடுகளை களைய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் சில IAS அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அந்தெந்த துறை தலைவர்களையும் இயக்குநர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று தங்களின் ஆளுமையை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அதிகார மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒன்று கவர்னர் அலுவலகம், இ...

முதலமைச்சர் பதவி விலக அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்திற்கு நல்லது நடக்கும், விமோசனம் பிறக்கும் என்ற நம்பிக்கை, கனவுகளோடு ஆட்சி எனும் அரிய பொக்கிஷத்தை மக்கள் வழங்கினார்கள். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி, குழந்தையின் கையில் கிடைத்த விளையாட்டு பொம்மையாக, புதுச்சேரி மக்களை ஆட்டுவிக்கிறார். நல்வாழ்வு பிறக்கும் என நம்பியிருந்த புதுச்சேரி மக்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி, விரக்தி, வேதனையின் எல்லைக்கு தள்ளியுள்ளார். சுத்தமான குடிநீருக்கு மட்டுமல்ல, பசியில் அழும் பச்சிளம் குழந்தைகளின் பாலுக்குக்கூட புதுச்சேரியில் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் அடிப்படை தேவைகள், நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மாநில அந்தஸ்து இல்லை, மன உளைச்சலில் உள்ளேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதேநேரத்தில் மறுபுறம் கவர்ச்சி நடன பாருக்கு அனுமதி, மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குகிறார். சாராய முதலாளிகளுக்காக அனைத்து சலுகைகளையும் சட்டத்தை வளைத்து செய்து தருகிறார். முதலமைச்சர் கையில் மாநில அந்தஸ்து என்ற அதிகார...

மின்துறை ப்ரீபெய்ட் திட்டத்தில் இமாலய ஊழல்‌.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர் மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லிக்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை புதுச்சேரி அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்த...

நாளை (24-01-2023)மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்.!

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி 22கி.வோ. லாஸ்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 24-01-2023 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 2.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் டிரக் முனையம், பிரியதர்ஷினி நகர். ராஜாஅண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர். ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர்தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர், அவ்வைநகர் ஒரு பகுதி, நெருப்புகுழி,நாவற்குளம், Dr. அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், பொதிகை நகர், தில்லைகன்னு அம்மா நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், புதுப்பேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட்டை ஒரு பகு...

வைத்திலிங்கம் எம்பிக்கு பாஜக கண்டனம்.!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தின் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் அவர்கள்,பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டிருந்தார்.அவர் புதுச்சேரியில் உள்ளாரா? அல்லது வெளிநாட்டில் உள்ளாரா? என்பது தெரியவில்லை. புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் என்பதை மறந்து விட்டாரா.! பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகம் போற்றும் தலைவராக திகழ்ந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் மற்றும் உலகளாவிய தொலைநோக்கு சிந்தனையால் ஈர்க்கப்பட்டு எண்ணிலடங்காதோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா கட்சி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் காலங்களில், வைத்திலிங்கம் அவர்கள் புதுவையில் முதல்வராக, சபாநாயகராக, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்ன செயல்களை செய்தார் என்று கூற முடியுமா? மது விற்பனை கடைகள...

நாளை (20/01/23)மின்தடை ஏற்படும் இடங்கள்.!

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 20-01-2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 2.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைப்படுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. சோனியாகாந்தி நகர், பாரதிபுரம் ஒருபகுதி. ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினிநகர் ஒருபகுதி, கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, லோகுநகர், சீனுவாசபுரம், வீமன் நகர் ஒரு பகுதி, புஷ்பா நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி ஒருபகுதி ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர் ஒருபகுதி, பாக்கமுடையான்பேட்,செயின்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுப்பேட், இலாசுப்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதிநகர் ஒருபகுதி, மகாவீர் நகர் ஒருபகுதி குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் &விரிவாக்கம், அவ்வைநகர் ஒருபகுதி. பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர் ஒருபகுதி, ஏர்போர்ட் ரோடு ஒருபகுதி, லாஸ்பேட் கல்வ...

கவர்னர், முதல்வருக்கு அதிமுக நன்றி.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்தை துவக்க இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறார். ஆனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாமலேயே குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 நிதியுதிவு வழங்கும் திடத்தை இந்தியாவில் முதன் முதலில் துவக்கியுள்ளார். அரசின் சார்பில் மாதந்தோறும் எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமையில் வாடி வரும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்று அதை அமல்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கும், அதற்கு அனுமதி அளித்த துணைநிலை ...

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்-அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் ஏனாமில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்குடன் சந்திப்பு: புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களை, இன்று 10.1.2023 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து பேசினார். சுயேச்சைசட்டமன்ற உறுப்பினர் திரு.கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களின் போராட்டம், கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் ஏனாமில் புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏனாம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக்கிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளேன். மக்கள் நலனுக்காக போராடுபவர்களை அம்மாவின் வழியில் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் வாழ்த்துவார்கள...

பிரதமர் மற்றும் முதல்வருக்கு நன்றி.! பாஜக மாநில தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி அல்லது அதற்கு பதிலாக பணம் வழங்கபடவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி NDA அரசாங்கம் நேற்றைய தினம் 3 லட்சத்து 53 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 67 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. 1,58,000 சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,400 ரூபாய் வீதமும், 1,95,000 மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 1:200 ரூபாய் வீதமும் மாநில அரசு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 செலுத்தப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நிருநரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்கள் பயனடையும் வகையில் அவரவர் வங்கி கணக்கில் DFT மூலம் கடந்த வாரம் 13 கோடி ரூபாய் 1,58,000 ரூபாய் சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசு புதுவை மாநிலத்தில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரி...

ஏனாம் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.

முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில், ஏனாம் சட்டமன்ற உறுப்பினரிடம் பெரும் எதிர் பார்ப்பை பார்த்து தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விடுத்து அரசியல் முதிர்ச்சி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது. தற்போது தான் பேசியதை தவறாக புரிந்து செய்தி வெளியிட்டுள்ளதாக கூறும் ஏனாம் எம். எல்.ஏ. சிந்தித்து செயல்பட வேண்டும். வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தேர்வானாலும் தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களிடம் தனது ெதாகுதிக்கு வேண்டிய திட்டங்களை நிறை வேற்றிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதை தவிர்த்து முதல்- அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசுவது தவறானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வருடன் பேசி சுமூக முடிவு எட்ட நடவடிக்கை; சபாநாயகர் தகவல்.!

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொகுதி மக்களின் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் போராடுவது அவர்களது உரிமை என்றும், ஏனாம் சுயேச்சை எம்எல்ஏ அசோக் முன்வைத்த 15 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி கொடுத்த நிலையில், மீதமுள்ள 10 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி அசோக் எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமி மீது நானும், ஏனாம் மக்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், முதல்வரைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை என அசோக் எம்எல்ஏ தன்னிலை விளக்கம் அளித்துள்ள தாகவும்,மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஏனாம் வந்தால், அவர் பாதங்களில் மலர் தூவி வரவேற்பேன் என்று சொன்னதை திரித்து செய்தியாக்கப்பட்டுள்ளதாக அசோக் எம்எல்ஏ தன்னிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறினார். ‌அசோக் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும்,மாநிலம் முழுவதும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்,இந்த விவகாரத்தில் முத...

பாஜக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை.!

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில வழக்கறிஞர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மூத்த வழக்கறிஞர் பழனி ராஜா உழவர்கரை மாவட்ட அமைப்பாளர் ஜெயபால், வழக்கறிஞர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்டிஐ மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தொகுதி வாரியாக இலவச சட்ட ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மகேஷ் ரெட்டி கலந்து கொண்டு நமோ ஆப் செயலி பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு என்று விளக்கம் அளித்தார். கூட்டத்தில் முன்னதாக பிரதமரின் தாயாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜக வழக்கறிஞர் அணியின் மாநில,மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏனாம் சுயேச்சை எம்எல்ஏக்கு அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ,  புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களைப் பற்றி ஏனம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி திரு.அசோக் அவர்கள் திமீர் தனத்தில் அவமதிக்கும் வண்ணம் பேசியது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மலிவு விளம்பரத்திற்காக சட்டமன்ற வாசற்படியில் அமர்ந்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நடத்தினார். அப்பொழுது அவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து எதற்கு உண்ணாவிரதப் போராட்டம் உங்கள் பிரச்சனை என்ன என்பதை கேட்டு அறிந்தார்.அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பகிரங்கமாக மேடை போட்டு பேசும்பொழுது வரும் எட்டாம் தேதி ஏனத்தில் நடைபெறும் கலை விழா நிறைவு நாள் விழாவிற்கு வரும் மாண...

ராகுல் பேரவை சார்பில்‌ காங்கிரஸ் 138வது ஆண்டு கொண்டாட்டம்.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் துப்புரவு பணியாளர்கள் உட்பட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அகில இந்திய காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில்,புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் ஊடக பிரிவு சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவு சேர்மான RE. சேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத...