முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவர்னர், முதல்வருக்கு அதிமுக நன்றி.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்தை துவக்க இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறார்.

ஆனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாமலேயே குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 நிதியுதிவு வழங்கும் திடத்தை இந்தியாவில் முதன் முதலில் துவக்கியுள்ளார். அரசின் சார்பில் மாதந்தோறும் எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமையில் வாடி வரும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்று அதை அமல்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கும், அதற்கு அனுமதி அளித்த துணைநிலை ஆளுநர் அவர்களுக்கும் புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்கு தேவையான இலவச அரிசி, இலவச வேட்டி, புடவை, இலவச பொருட்கள் மற்றும் பல்வேறு உதவிப்பொருட்களுக்கு பதிலாக பணம் வழங்குவதை மக்கள் விரும்புவதாக துணைநிலை ஆளுநர் கூறியிருப்பது தவறான கருத்தாகும், பெரும்பாலான மக்கள் நேரடி பண பரிமாற்றத்திற்க பதிலாக அரசி உள்ளிட்ட உணவு பொருட்களாக பெறுவதையே விரும்புகின்றனர்.

2013-ம் ஆண்டு ஜனவரி 1-ல் உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தை மத்தியில் திமுக, காங்கிரஸ கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. அதில் புதுச்சேரி உள்ளிட்ட 51 மாவட்டங்களில் இத்திட்டத்தை அப்போதைய காங்கிரஸ் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு அமல்படுத்தியது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் நேரடி பணமாற்றம் என்பது மாநில உரிமைக்கான அதிகாரத்தை குறைக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் உணவு மானியம், கல்வி உதவித்தொகைகள், முதியோர் உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகைகள் உள்ளிட்ட 39 வகையான மானியங்களுக்கு நேரடி பணமாற்றம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து தமிழகத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து முதலமைச்சராக ஆட்சி செய்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் நேரடியாக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.

ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, இலவச கோதுமை மற்றும் பல்வேறு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால் படிப்படியாக விவசாயிகளிடம் இருந்து அரசு விவசாய உணவு பொருட்களை கொள்முதல் செய்வது நிறுத்தப்படும். இதனால் விவசாய உற்பத்தி பொருட்கள் அனைத்தும் தனியாரிடம் விற்கும் சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். இதன் மூலம் நாடுமுழுவதும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் தலை தூக்கும். இதே போல் இலவச துணிகளுக்கு பதிலாக பணம் வழங்கப்படுவதால் அரசு சார்பில் செயல்பட்ட பல பஞ்சாலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது கண்கூடான சாட்சியாகும். நேரடி பண பரிமாற்றம் (Direct Money Transfer) என்பது மக்களுக்கு எதிரான திட்டமாகும்.

கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது இலவச அரிசி, இலவச துணிமணிகள், பண்டிகைகால இலவச பொருட்கள் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்றது. அந்த ஊழலுக்கு உரியவர்கள் மீதும், ஊழலுக்கு துணை போன சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்காது. வாங்கும் பொருள்களில் முறைகேடு நடைபெறுகிறது, கமிஷன் வாங்கப்படுவது என்ற ஒரே காரணத்திற்காக நல்ல திட்டங்களை மாற்றம் செய்வது தவறான ஒன்றாகும். எனவே பழைமுறைப்படியே பணம் வழங்குவதற்கு பதிலாக இலவச அரிசி, இலவச உணவு பொருட்கள், இலவச துணிமணிகளை எவ்வித முறைகேடும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...