முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களுக்கு எதிரான திட்ங்களை செயல்படுத்தும் முதல்வர் ரங்கசாமி.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், ஆட்சியாளர்களும் ஊழல், முறைகேடு அற்ற வெளிப்படையான, நம்பகத்தன்மைக்கு உகந்த ஆட்சியை தர வேண்டும். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு புதுச்சேரி மக்களிடம் நம்பகத்தன்மையை நாள்தோறும் இழந்து வருகிறது. புதுச்சேரி மாநில மக்களின், இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் திட்டங்களுக்கு எந்தவித தயக்கமும் இன்றி முதலமைச்சர் அனுமதி அளித்து வருகிறார். புதுச்சேரி மக்களையும், மாநிலத்தையும் பாதுகாப்பதே தனது கடமை, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை வாய் ஜம்பமாக பேசுகிறார். அதேநேரத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, கவர்ச்சி நடன மதுபார்களுக்கு அனுமதி, மின்துறை தனியார்மயம் என புதுச்சேரி மாநில மக்கள், அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிரான திட்டங்களை சிறிதும் கவலையோ, அச்சமோ இன்றி தொடங்குகிறார். தவறுகளை தட்டிக்கேட்கும் தாய்மார்களிடம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சுட்டிக்காட்டி, இதற்கு நிதி எங்கிருந்த...

புதுவையில் நாளை (28-02-2023) மின்தடை ஏற்படும் இடங்களின் விவரம்.

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்தப் பாதையில் சில பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் இடங்களிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.அதன்படி நாளை(28-02-2023) காலை 10:30 முதல் மதியம் 01:00 வரை பாரதி வீதி (நீடராஜப்பையர் வீதி முதல் சவரிராயலு வீதி வரை), மகாத்மா காந்தி வீதி, (நீடராஜப்பையர் வீதி முதல் சின்ன வாய்க்கால் வீதி வரை). சின்ன வாய்க்கால் வீதி (எஸ். எஸ். பிள்ளை விதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை), சவரிராயலு வீதி (பாரதி வீதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை), செயின்ட் தெரெசா வீதி (எஸ். எஸ். பிள்ளை வீதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை) மற்றும் குளத்துமேடு வீதி முழுவதும் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை வரி வசூலிப்பதா.! பாஜக கண்டனம்.!

* சட்டசபையில் முதலமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பை ஏற்று, குப்பை வரி வசூல் செய்வதை அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்* புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் வரி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் உழவர்கரை நகராட்சி உள்ளிட்ட சில நகராட்சிகளில் குப்பை வரி செலுத்தும் பட்சத்தில் மட்டுமே வீட்டு வரி செலுத்த முடியும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளின் மூலம் அரசின் உத்தரவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி குப்பை வரி வசூல் செய்வது ஏற்றத்தக்கதல்ல. அரசு அனுமதியின்றி தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் செயல்பட்டு வருவதுடன் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்...

அனுமதி இன்றி செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கோரிக்கை.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி  செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு சேர்க்கப்பட்ட மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பணத்திற்காக ஆதரவற்றோரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆசிரமத்திலிருந்து சுமார் 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மாயமான 16 பேர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. புதுச்சேரியிலும் பல அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி பெற்று பல காப்பகங்கள் சிறப்பான சேவையை செய்து வருகின்றன. அதேநேரத்தில் சில காப்பகங்கள் அனுமதியின்றி லாபநோக்கோடு செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டாலும், முதியோருக்கு உரிய சிகிச்சை, அடிப்பட...

தனித்து நிற்க காங்கிரசுக்கு வலிமை இருக்கா? பாஜக கேள்வி?

காரைக்கால் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சாமிநாதன்,புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பிஜேபி தலைமையிலான ஆட்சியை பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து நாராயணசாமி பேசி வருகிறார் என்றும் ஊழலை பற்றி பேச முதலமைச்சர் நாராயணசாமிக்கு தகுதி இல்லை என தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்காரர்களே நாராயணசாமியை புறக்கணித்து வருகின்றனர் என்றும்,2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வலிமையை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். விரைவில்   தொழிலதிபர் அதானிகும்,பிரதமர் நரேந்திர மோடிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தைரியம் இருந்தால் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பயத்தின் அடிப்படையில் நாராயணசாமி உளறி வருவதால், புதுச்சேரியில் விரைவில் காங்கிரஸ் கூடாரம் காலி ஆகி அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு திருப்பி வர வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, புதுச்சேரி அதிமுக புகார் கடிதம்‌!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைதியின் உறைவிடமாக திகழ்ந்த புதுச்சேரியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் பெருகி வருகிறது. உலகளாவிய போதைப்பொருட்களின் நடமாட்டம், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இவற்றை கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டிய புதுச்சேரி அரசு நடைபெறும் சம்பவங்களை மறைப்பதில்தான் அதீத அக்கறை காட்டி வருகிறது. மாண்புமிகு பாரத பிரதமரின் வாக்குறுதியை ஏற்றுதான் புதுச்சேரி மக்கள் வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைத்துக்கொடுத்தனர். தற்போது புதுச்சேரி மக்கள் பீதியுடன் வாழ்கின்ற சூழ்நிலையை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் சில மாதத்திற்கு முன்பு ஒரு வீடு தீடீரென வெடித்தது. வீட்டின் கதவுகளும், கான்கிரீட் துõண்களும் பெயர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்துக்கு மின் கசிவு, சிலிண்டர் வெடிப்பு, வெடிபொருட்கள் பதுக்கல் என எதுவும் காரணம் இல்லை என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் ப...

புதுச்சேரி அதிகாரிகளுக்கு பாஜக தலைமை கண்டனம்.!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நேற்றைய தினம் தமிழ் கடவுள் முருகனின் விழாவான தைப்பூச தினம் கொண்டாடப்பட்டது. மேலும், இராமலிங்க அடிகளார் முக்தி அடைந்த தினமான தைப்பூச தினத்தன்று ஜோதி வடிவாகிய வள்ளலாரை வணங்கி வருகின்றனர். இந்த தைப்பூச திருநாளன்று மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்திருந்தது. ஆனால் அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் தங்கள் பணியினை சரிவர செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதே முக்கிய காரணமாகும். மத்திய அரசினால் கொண்டுவரப்படுகின்ற மாநிலத்திற்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தபடாமலும், திட்டத்திற்கான நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக (3 ஆண்டுகள்) ஒரே துறையில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுக்கு உட்பட்ட நாட்டின் பிற பகுதியின் UT பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இடம...

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 3 பேர் கைது.!

புதுச்சேரியில் கலால்துறை உத்தரவை மீறி, வள்ளலார் தினத்தன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் இதனை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க, புதுச்சேரி கலால் ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைத்து, புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராம பகுதி முழுவதும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். சோதனையின் அடிப்படையில் சோரியாங்குப்பம், உறுவையார் அரியாங்குப்பம் (மணவெளி), ஐயன்குட்டிபாளையம் (தர்மபுரி) மற்றும் அரியூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 3 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 5250 மதிப்புள்ள சுமார் 2 லிட்டர் மதுபானம் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றும் அவர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 38,000/-விதிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.