முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, புதுச்சேரி அதிமுக புகார் கடிதம்‌!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
அமைதியின் உறைவிடமாக திகழ்ந்த புதுச்சேரியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் பெருகி வருகிறது. உலகளாவிய போதைப்பொருட்களின் நடமாட்டம், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இவற்றை கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டிய புதுச்சேரி அரசு நடைபெறும் சம்பவங்களை மறைப்பதில்தான் அதீத அக்கறை காட்டி வருகிறது. மாண்புமிகு பாரத பிரதமரின் வாக்குறுதியை ஏற்றுதான் புதுச்சேரி மக்கள் வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைத்துக்கொடுத்தனர். தற்போது புதுச்சேரி மக்கள் பீதியுடன் வாழ்கின்ற சூழ்நிலையை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் சில மாதத்திற்கு முன்பு ஒரு வீடு தீடீரென வெடித்தது. வீட்டின் கதவுகளும், கான்கிரீட் துõண்களும் பெயர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்துக்கு மின் கசிவு, சிலிண்டர் வெடிப்பு, வெடிபொருட்கள் பதுக்கல் என எதுவும் காரணம் இல்லை என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்தார். இதற்கான உண்மையான காரணத்தை புதுச்சேரி அரசு வெளியிடாமல் மறைத்து விட்டது. இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர், மின்கசிவு என எந்த காரணமும் இன்றி பலத்த சத்தத்துடன் வீடு இடிந்துள்ளது. வீட்டின் நிலைக்கதவு முழுமையாக பெயர்ந்து விழுந்துள்ளது. வீட்டில் இருந்த ஒரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவங்களுக்கான உண்மையான காரணத்தை காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தடயவியல் துறை உட்பட புதுச்சேரி அரசால் கண்டறிய முடியவில்லை. அடுத்தடுத்து ஏற்படும் விபத்துக்கான காரணம் தெரியாமல் புதுச்சேரி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

எனவே மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரியில் வீடுகள் வெடிப்பதற்கான காரணம் என்ன? என கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். மத்திய அரசு நிபுணர் குழுவினர் புதுச்சேரியில் விபத்துகள் நடந்த வீடுகளில் ஆய்வு செய்து உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியையும், அச்சத்தையும் போக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...