புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரின் மனைவி அண்ணா பிராபவதி தலைமையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய அணி உருவாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும்,ஊசுடு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சாய்.ஜெ சரவணன்குமார்.இவரது மனைவி அண்ணா பிரபாவதி. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து தொகுதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசுக்கு எதிராக சாய்.ஜெ சரவணன்குமார் எம்எல்ஏ, குரல் கொடுத்து வரும் நிலையில்,எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவரது மனைவி அண்ணா பிரபாவதி திருபுவனை தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.மேலும் தொகுதி முழுவதும் அறிமுகமாகி வீடு வீடாக சென்று பரிசு தொகுப்பு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணா பிரபாவதி தலைமையில் மேலும் 2 தொகுதிகளில் புதியதாக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யபட்டு தொகுதி முழுவதும் இன்று முதல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பே...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.