புதுச்சேரி மாநிலம் அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத விதத்தில் கியாஸ் மானியம், அரசின் மூலம் உதவி தொகைகள் பெறாத குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் தொகை என 3 முத்தான திட்டங்களை முதல்வர் அறிவித்து, திட்டத்தின் பயன் மக்களுக்கு சென்றடைய தற்போது அரசாணை வெளியிட மாண்புமிகு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டங்கள் உடனடியாக செயல் வடிவம் பெற்றதற்கு அதிமுக சார்பில் பாராட்டுக்களை மாண்புமிகு முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். கியாஸ் மானிம் சம்பந்தமாக பட்ஜெட்டில் மாண்புமிகு முதல்வர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மானியம் உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.126 கோடி நிதி தேவைப்படும். தற்போது தலைமை செயலாளர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 வழங்காமல் சுமார் 1,65,500 சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் ரூ.300 வழங்க அனுமதி அளித்தும், சுமார் 1,87,500 மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.150 ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.