முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி மீது அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநிலம் அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத விதத்தில் கியாஸ் மானியம், அரசின் மூலம் உதவி தொகைகள் பெறாத குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் தொகை என 3 முத்தான திட்டங்களை முதல்வர் அறிவித்து, திட்டத்தின் பயன் மக்களுக்கு சென்றடைய தற்போது அரசாணை வெளியிட மாண்புமிகு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டங்கள் உடனடியாக செயல் வடிவம் பெற்றதற்கு அதிமுக சார்பில் பாராட்டுக்களை மாண்புமிகு முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கியாஸ் மானிம் சம்பந்தமாக பட்ஜெட்டில் மாண்புமிகு முதல்வர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மானியம் உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.126 கோடி நிதி தேவைப்படும். தற்போது தலைமை செயலாளர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 வழங்காமல் சுமார் 1,65,500 சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் ரூ.300 வழங்க அனுமதி அளித்தும், சுமார் 1,87,500 மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.150 மானியம் என அனுமதி அளித்துள்ளது தவறான ஒன்றாகும். 

இது மக்களிடையே அரசின் மீது அவ நம்பிக்கையையும், விரக்தியையும் ஏற்பட்டுள்ளது. மஞ்சள் அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.300 கியாஸ் மானியம் அளித்தால் அரசுக்கு கூடுதலாக மாதம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.32 கோடி தான் செலவாகும். இந்த ரூ.32 கோடி என்பது அரசுக்கு பெரிய விஷயம் அல்ல. இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மாண்புமிகு முதல்வரும், துணைநிலை ஆளுநரும் அனைத்து குடும்பத்தினருக்கும் கியாஸ் மானியம் ரூ.300 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உயரிய திட்டத்திற்கு எதிராக உள்ள எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் வெகுஜன மக்கள் விரோதிகள் மட்டுமல்லாமல், அரசுக்கு திட்டமிட்டு அவப்பெயரை தேடித்தரும் அதிகாரிகள் என முடிவு செய்து மாநிலத்தில் இருந்து மாற்றம் செய்திடல் வேண்டும்.

ஒரு காலத்தில் உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக இருந்த நிலை மாறி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் முதல்வராக இருப்பதை சகித்துகொள்ள முடியாமல் முன்னாள் முதல்வர் திரு.வைத்திலிங்கம் தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சரிடம் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதியும், பல்வேறு புதிய திட்டங்களையும் எடுத்துரைத்த மாண்புமிகு முதல்வரை திரு. வைத்திலிங்கம் குறை கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ள திரு. வைத்திலிங்கம் மாநில மக்களின் நலன் கருதி ஏன் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மாநில உரிமைகள் குறித்து கடிதம் கொடுக்கவில்லை. மத்திய நிதி அமைச்சரை சந்திக்காதவருக்கு முதல்வரை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை. 

மாண்புமிகு முதல்வர் ஏசி காரில் செல்கிறார். வீடு போல பெரியதாக உள்ளது. கண்ணாடியை கூட இறக்காமல் உள்ளார் என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

இந்தியாவிலேயே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எங்கள் எடப்பாடியாருக்கு அடுத்தபடி எளிமையான முதல்வர் என பெயர் பெற்றவர் திரு. ரங்கசாமி. அவர் ஏசி கார் வைத்திருக்க கூடாதா? எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் சட்டசபையில் பாராளுமன்ற உறுப்பினர் உங்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்து கொடுத்தவர் புதுச்சேரி முதல்வர். இந்த அடிப்படையில் உங்கள் ரூமுக்கு எத்தனை ஏசி, உங்கள் உதவியாளர் அறைக்கு எத்தனை ஏசி உள்ளது. உங்களை பார்க்க வரும் பார்வையாளர் அறையில் எத்தனை ஏசிகள் உள்ளது என எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வாகனம் ஏசி இல்லாத பழைய அம்பாசிட்டரா பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் முதல்வராக இருந்த போது உங்கள் உபயோகத்திற்கு எத்தனை அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு முன்னாள் முதல்வர்கள் இன்னாள் முதல்வரை பற்றி பேசும் போது தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். முதல்வர் பயன்படுத்தும் பொருட்களை பற்றி பேசும் போது ஆண்ட பரம்பரையில் இருந்து வந்த திரு. வைத்திலிங்கம் போன்ற முன்னாள் முதல்வருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...