முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்.! என்.ஆர்‌ காங்கிரஸ் எம்எல்ஏ மீது அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் பாஸ்கர் (எ)தஷ்ணாமூர்த்தி அவர்களை, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி மக்கள் அரும்பாடுபட்டு வெற்றி பெறச் செய்தோம்..  அவர் வெற்றி பெற்று சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை.  1)தான் வெற்றி பெற்றவுடன் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு சொசைட்டி மற்றும் கிராம வங்கி மூலம் சிறு வியாபாரம் செய்ய லோன் வாங்கித் தருவதாக கூறினார்!செய்தாரா? 2) அரியாங்குப்பத்தில் இருந்து நகரப்பகுதிக்கு சென்றடைய போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் நிலை அறிந்து அதற்கென்று ஏதேனும் ஆளுகின்ற தன் சொந்த கட்சி முதல்வரிடம் சென்று ஏதேனும் மனு அளித்தாரா?...

பாஜக - என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது -சிபிஐ குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எம்.தீனதயாளன் லஞ்சம் வாங்கும் போது மத்திய குற்ற புலனாய்வுத் துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் செயற்பொறியாளரும், உதவி பொறியாளரும் சிக்கியுள்ளனர். பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இது புதுச்சேரி மாநில என். ஆர். காங்கிரஸ்- பிஜேபி அரசாங்கத்தின் லஞ்ச லாவண்ய செயல்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.     கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளர் செய்த லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருக்கிற ஆட்சியாளர்கள் யார்...? ஆளும் கட்சிகளுக்கு எவ்வளவு பங்கு சென்றிருக்கிறது போன்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாகியிருக்கிற அரசாங்கத்தின் மாபெரும் கட்டமைப்புகளும், திட்டங்களும் இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டுகின்றன.     சிபிஐ சோதனையில் பிடிப்பட்ட ஆதாரங்கள், கோப்புகள், டைரிகள், விபரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்...

மாநில அந்தஸ்து பெற முதல்வர் டெல்லி செல்லாதது ஏன்?

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்   விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? என்பது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.  கடந்த 14.08.2024 அன்று புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்துவோம்' என அறிவித்தார். ஆனால், இதுவரையில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி செய்யவில்லை.  ஆனால், தற்போது முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'துணைநிலை ஆளுநர் வரும் 15ஆம் நாளன்று குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக்குழுவில் சே...