இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் - 4 அம்ச - பட்ஜெட் என அறிவித்து இவர்களுக்கு பிரயோஜனமில்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அறிவித்ததால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து உள்ளார். தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசும்- விவசாயிகள் போராட்ட குழுவினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான் இது நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தது போன்றே..... இப்போது 5 ஆண்டுகளில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு- எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனும் பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது. ஏழைகள் வாழ்வு மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் இல்லை. 80 கோடி பேர் ஏழ்மையிலும், வறுமையிலும் இருக்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இ...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.