முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 4; முதல்வரை அலர்ட் செய்யும் பாஜக..!

புதுச்சேரி பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் அவர்களது பிறந்தநாள் வருகின்ற ஆகஸ்டு 4ம் தேதி வருகிறது. அதற்கு அவரது தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பேனர்களை வைத்து வருகின்றார்கள். காமராஜர் அவர்கள் கோடிக்கணக்கான ஏழை மாணவர்கள் படிப்பதற்காக ஏராளமான கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய பெருமை ஊழற்ற நேர்மையான ஆட்சியைக் கொடுத்த காமராஜர் அவர்களையே சாரும். கல்விக்கு கண் திறந்த காமராஜர் அவர்களை பின்பற்றும் புதுவை முதல்வர் அவர்கள், அதுபோல இந்த ஆண்டு முதல்வர் அவர்களுக்கு தனது தொண்டர்களுக்கு கட்டவுட் மற்றும் பேனர் வைக்கும் பணத்தில், ஏராளமான ஏழை மாணவர்கள் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் இடம் கிடைத்து, முதலாம் ஆண்டு கல்வித் தொகையை கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிற்கும் சூழ்நிலையில் உள்ள கூலி தொழிலாளர்கள், தனியார் தொழிலாளர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவர்கள் அவர்களுக்கு உயர்கல்வியை கற்க முதலாம் ஆண்டு கல்வித் தொகையை முதல்வர் பிறந்த நாள் பரிசாக கட் அவுட் பேனர் வைக்கும் பணத்தை ஏராளமான மாணவர்களுக்கு வழங்க முன்வர அறிவுறுத்த வேண்டும். மேலும் பேனர் இல்லாத அழகிய புதுச்சேரியை உருவாக்க முதல்வர் முதல் முயற்சி எடுக்க வேண்டும். இதே போன்று, அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் ஏராளமான ஏழை மாணவர்கள் முதல்வர் பெயரை சொல்ல முன் வருவார்கள். மேலும் முதல்வர் பிறந்த நாள் பரிசாக வரும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மற்றும் அரசு சார்புள்ள ஊழியர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக சம்பளம் போடாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள். மேலும், அவர்கள், தங்களது பிள்ளைகள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். வருகின்ற பட்ஜெட்டில் முதல்வர் அவர்களுடைய பிறந்தநாள் பரிசாக அவர்கள் சம்பளத்திற்கு நிதி ஒதுக்கி பாக்கி சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை கட்டவுட் மற்றும் பேனர் விஷயத்தில் அமல்படுத்த முன் வரும் போது, அவர்களுக்கு அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் நேர்மையான அதிகாரியாக இருந்தும் பல இடங்களில் தங்களது கடமையை அவர்களால் செய்ய இயலவில்லை. அவர்களுக்கு புதுச்சேரி அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...