புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், உண்மையாக பயன்பெற வேண்டிய ஏழை விவசாயிகளும் உள்ளூர் அரிசி ஆலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுளனர். இந்த மோசடியால், புதுச்சேரி அரசின் மக்கள் நலன் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியிலுள்ள ஏழை எளிய விவசாயிகளின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2024 ரேசனில் அரிசி வழங்கும் டெண்டரில் தனக்கு சாதகமான வடநாட்டு கம்பெனிக்கு ஆதரவாக அவர்கள் மட்டுமே பங்கு பெற்று தேர்வாகும் வகையில் டெண்டர் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த எந்த மில்லும் இந்த டெண்டரில் கலந்து கொள்ளவில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.47.70 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு முதல் நான...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.