முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலவச அரிசி திட்டத்தில் முறைகேடு; திமுக பரபரப்பு குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், உண்மையாக பயன்பெற வேண்டிய ஏழை விவசாயிகளும் உள்ளூர் அரிசி ஆலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுளனர். இந்த மோசடியால், புதுச்சேரி அரசின் மக்கள் நலன் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியிலுள்ள ஏழை எளிய விவசாயிகளின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 2024 ரேசனில் அரிசி வழங்கும் டெண்டரில் தனக்கு சாதகமான வடநாட்டு கம்பெனிக்கு ஆதரவாக அவர்கள் மட்டுமே பங்கு பெற்று தேர்வாகும் வகையில் டெண்டர் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த எந்த மில்லும் இந்த டெண்டரில் கலந்து கொள்ளவில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.47.70 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு முதல் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்க நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்கும் டெண்டர், அதே வடநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்து வழங்கி இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு டென்டரின் கீழ் புதுச்சேரி விவசாயிகளோ புதுச்சேரி அரிசி ஆலைகளோ எந்தவித ஆதாயமும் பெறவில்லை. புதுச்சேரியில் இருந்து அரிசியோ, நெல்லோ, கொள்முதல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் தற்போது ரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு புதுச்சேரியில் வழங்கப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய சந்தை நிலவரப்படி, அரிசி விலை குறைந்திருக்கும் சூழலில், போன ஒப்பந்தத்தின் போது, ஒரு கிலோவிற்கு ரூ.9/- கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதே ஒரு கிலோ அரிசிக்கு ரூ.15/-கூடுதலாக புதுச்சேரி அரசு வழங்கியுள்ளது.

தற்போது டெண்டர் வழங்கப்பட்டு அரிசி விநியோகிக்கக்கூடிய வடநாட்டு கம்பெனிக்கு, புதுச்சேரியில் தனக்கென்று சொந்தமான அரிசி ஆலையோ, கொள்முதல் நிலையமோ எதுவுமே இல்லை. அப்படி இருக்க புதுச்சேரியிலுள்ள விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வட மாநிலத்து கம்பெனிக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கிறேன். தற்போதுள்ள இந்த முறைகேடான டெண்டரை உடனே ரத்து செய்துவிட்டு, புதுச்சேரியின் சிறு குறு விவசாயிகள், அரிசி ஆலைகள் பயன்பெறும் வகையில், புதுச்சேரியிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும்.

நலிவடைந்து வரும் விவசாயம் செழித்தோங்க புதுச்சேரி அரசு இலவச அரிசி வழங்கும் இந்த திட்டத்தில் நம் மண்ணின் மைந்தர்காள் பயன்பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கை முடிவாக அதனை செயல்படுத்திட வேண்டும். தற்போது மஞ்சள் அட்டைக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசியை 15 கிலோவாக உயர்த்தித்தர வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி ரேஷன் அட்டைக்கு இரண்டு கிலோ கோதுமை வழங்கப்படுவதாக உறுதி அளித்த நிலையில் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. அதனையும் உரிய முறையில் மக்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை வாடகை பிரச்சினைகள், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் போன்ற அனைத்து நிர்வாக ரீதியான பிரச்சினைகளையும் சரி செய்து ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய இந்த இலவச ரேஷன் அரிசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த டெண்டர் முறையாக மீண்டும் செயல்படுத்தப்படவில்லை என்றால் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்பு தேதியிட்டு நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...