முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதல்வர் ரங்கசாமி மீது அதிமுக கடும் விமர்சனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். நீதி தேடி வருவோருக்கு ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன் பாவமும், பழியும் எய்தி தானே அழிவான். இது திருவள்ளுவன் வாக்கு. புதுச்சேரி மாநிலத்தில் நடப்பது மன்னராட்சியும் அல்ல, ஆட்சியில் அமர்ந்திருப்பவர் மன்னரும் அல்ல. ஏழை, எளிய நடுத்தர மக்கள் நல்வாழ்வு கிடைக்கும் என நம்பி அளிக்கும் வாக்குகளால்தான் ஆட்சி எனும் அரியணை அலங்கரிக்கப்படுகிறது. நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும், நான் சொன்னால் தட்டாமல், எல்லோரும் செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். முதலமைச்சர் நினைத்தது எது நடக்கவில்லை? கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 300க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்தார். பதவியேற்றவுடன் முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தினார். 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார். காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு கைமாற்ற சம்மதம் பெற்றார். புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகளை தொடங்க அனு...

ஸ்டாலினால் தமிழகத்திற்கு தலைகுனிவு - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன்  இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுபோது அவர் கூறியதாவது : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை பெற்ற முதலமைச்சர் ரங்கசாமிக்கும், புதுச்சேரி மாநில ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி அவர்களுக்கும் அதிமுக சார்பில் பாராட்டுத்தலை தெரிவித்துக் கொள்கிறோம்.  அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரியான தலைமைச் செயலர், சுகாதாரத் துறை, செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  எனவே தலைமைச் செயலாளர் மீது துணைநிலை ஆளுநர் கூறியது போல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏற்கனவே இருந்த 150 இடங்களுடன் ஒவ்வொரு மருத்துவ கல்லூரி...

தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படும் முதலமைச்சர் ரங்கசாமி.. அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரி அரசு தொடர்ந்து மாணவர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய எந்த குறைபாடுகளையும் சரி செய்யவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள ஒரே அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் ரத்தாகி உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகவே தொடர்ந்து முதலமைச்சரும், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளும் செயல்படுகின்றனர். அரசு மருத்துவ கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்ததுபோல முதலமைச்சரும், அதிகாரிகளும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை சீர்செய்த பல மாநில மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் இன்று வரை மாணவர் சேர்க்கையை நடத்த அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கவில்லை. புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு ...

போர்க்கால அடிப்படையில் அரசு பள்ளி கட்டிங்களை மேம்படுத்த வேண்டும்.! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்.!

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு புதுச்சேரி நகர்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியம். ஆனால் இன்றைக்கு ஆளக்கூடிய ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசாங்கம் நகர்ப்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறது இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய பிஜேபி அரசுக்கு ஆதரவான ஒரு அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் தாராளமாக நிதி கிடைக்கும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்றைக்கு புதுச்சேரி கல்வித்துறையில் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் கல்வித் துறையை சீரழித்துள்ளது. குறிப்பாக நகர்புறத்தில் தொடர்ச்சியாக பழமை வாய்ந்த அரசு பள்ளி கட்டிடங்களை புணரமைக்காமல் இடியும் நிலை வரை காலம் கடத்த...

செந்தில் பாலாஜியால் தமிழகத்திற்கு தலைகுனிவு.! புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று பேட்டியின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையின் பொறுப்பற்ற தவறான பேச்சுக்கு நேற்றைய தினம் எங்களின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் பெருந்தன்மையோடு ஒரு கண்டன தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றினார். அந்த கண்டன தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டணியில் இருப்பதற்காக மற்ற கூட்டணி கட்சிகளின் எண்ணத்திற்கு ஏற்ப கருத்து கூறுவது பொறுத்தமற்றது என அண்ணாமலை கூறிள்ளார். கூட்டணி கட்சியில் இருப்பதால் கூட்டணி கட்சிகளிண் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது என கூறும் அண்ணாமலைக்கு, கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவை பற்றி குறை கூற எந்த நியாயமும் இல்லை என்பதை அண்ணாமலை உணர வேண்டும். திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வலது, இடது கரமாக செயல்பட்டு வரும் மின்சார கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தற்போது எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய அளவில் ஒட்டுமொத்த தமிழத்திற்கும் தலைகுனிவு ஏற்பட...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதுச்சேரி அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறி, அதேபோல வாழ்ந்து காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். நீங்கள் களங்கம் ஏற்படுத்த நினைக்கும் *இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் கார்டன் வீட்டில் உங்கள் கட்சியை சேர்ந்த வட இந்திய தலைவர்கள் காத்துக்கிடந்த உண்மையான வரலாறு தெரியாமல்* தான்தோன்றித்தனமாக தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை மீறி அவர் செயல்படுகிறார். அதிமுகவுடன் கூட்டணி தொடரக்கூடாது என்ற எண்ணத்தோடு அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. *உண்மையில் தைரியமும், தெம்பும் இருந்தால் தமிழ்நாட்டை விடுங்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மட்டுமாவது அதிமுகவின் துணை இன்றி பாரதீயஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு, டெபாசிட் வாங்க திராணி உள்ளதா?* புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவ...

நலத்திட்டங்களை பெற மீனவர்களை இழிவுபடுத்தும் புதுச்சேரி அரசுக்கு அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசும், முதலமைச்சரும் அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் காலத்தோடு மக்களை சென்றடைவது கிடையாது. அரசின் நலத்திட்டங்கள் எப்போது கிடைக்கும்? என மக்கள் காத்திருந்து, காத்திருந்து காலம்தான் உருண்டோடுகிறது. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு லேப்டாப், இளநிலை, மேல்நிலை எழுத்தர் தேர்வு உட்பட முதலமைச்சரின் எந்த அறிவிப்பும் அவர் கூறியபடி காலத்தோடு நடைமுறைக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. 3 தொகுதி மக்களை தவிர பிற தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கு படும் துயரம் சொல்லி மாளாது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது கிடையாது. மீன்களை பிடிக்கிறாயா? மீன்களை விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள்ளார்களா? மீன்பிடிக்கிறார்களா? வேறு வேலைசெய்கிறார்களா? எ...